பொதுமக்களுக்கு கடுமையான எச்சரிக்கை!! இந்த 8 மாவட்டங்களுக்கு மிக கனமழை உஷார்!!
தற்போது கேரளாவில் கனமழை பெய்ய இருப்பதால் 8 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டதோடு 33 நிவாரண முகாம்கள் திறக்கப்பட்டு உள்ளது.
கேரளா மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு தாமதமாக தான் தொடங்கியது. இருப்பினும் சில வாரங்களுக்கு முன்னர் அங்கு கனமழை பெய்தது. அடுத்து ஒரு வார இடைவெளி விட்டு மீண்டும் மழை பெய்ய தொடங்கி உள்ளது. சில மாவட்டங்களில் கனமழையும் சில மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்து வருகிறது.இந்த மழையானது 27-ஆம் தேதி வரை நீடிக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் எர்ணாகுளம், இடுக்கி, திருச்சூர், பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர், காசர்கோடு ஆகிய 9 மாவட்டங்களுக்கு நேற்று மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. அதன்படி அந்த மாவட்டங்களில் நேற்று கனமழை பெய்து உள்ளது.
மழையின் காரணமாக கேரள கடற்கரையில் கடல் மிகவும் சீற்றத்துடன் காணப்படும் என்றும், இதன் காரணமாக விழிஞ்சம் முதல் காசர்கோடு வரை 2.5 மீட்டர் முதல் 2.9 மீட்டர் உயரம் வரை அலைகள் வீசக்கூடும் வாய்ப்புகள் உள்ளதாக கடல்சார் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் வருகிற 28-ஆம் தேதி வரை கேரளா-கர்நாடகா கடற்கரை மற்றும் லச்சத்தீவு பகுதிகளுக்கு மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக மாநிலம் முழுவதும் 33 நிவாரண முகாம்கள் திறக்கப்பட்டு உள்ளது. அந்த முகாம்களில் இன்று காலை வரை 300-க்கும் மேற்பட்டவர்கள் தங்க வைக்கப்பட்டு இருப்பதாக கேரள அரசு தெரிவித்துள்ளது.