பொதுமக்களுக்கு ஒரு அதிர்ச்சி செய்தி!.. பற்றாக்குறை மருந்து பீதியில் நோயாளிகள்…

0
177
A shocking news for the public!.. Patients in panic of lack of medicine
A shocking news for the public!.. Patients in panic of lack of medicine

பொதுமக்களுக்கு ஒரு அதிர்ச்சி செய்தி!.. பற்றாக்குறை மருந்து பீதியில் நோயாளிகள்…

தமிழ்நாடு மருத்துவ சேவை கழகம் மூலம் அரசு மருத்துவமனைகளுக்கு மருந்துகள்அளிப்பது மிகவும் குறைந்துள்ளது. ட்ரிப்ஸ் ஆன்ட்டிபயாடிக் மாத்திரைகள் அனைத்தும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது என தகவல் வெளியாகியது.

மாவட்ட அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளின் எண்ணிக்கைகள் ஏற்ப ஆண்டுக்கு நாலு காலாண்டுகளாக மருந்துகள் வழங்கப்படும்.இந்நிலையில் 2002முதல்2003 வரை காண முதல் காலாண்டு முடிந்து இரண்டாவது காலாண்டு பாதி வரையிலும் மருந்துகள் பற்றாக்குறையாகவே உள்ளது.

ஒவ்வொரு காலண்டுக்கேற்ப மருந்துகளை பொறுத்த வரை ஒரு 50 லட்சம் முதல் 1.5கோடி வரை மாத்திரைக்கான தொகை மருத்துவமனை வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும்.இதற்கு ஏற்ப மருத்துவ சேவை கழகம் மருந்துகளை தொடர்ந்து வழங்க வேண்டும்.

ஆயிரம் மருந்துகள் இருந்தால் 600 மருந்துகளை மருத்துவ சேவை கழகம் மூலமாக வாங்க முடியும்.மீதி மருந்துகளை தேவைக்கேற்ப உள்ளூர் கடைகளில் வாங்கலாம். தற்போது 600 மருந்துகளில் 300 மருந்துகள் வரையே மருத்துவ சேவை கழகம் வழங்கபட்டு வருகிறது.

அதன்படி ஒரு நிறுவனத்தின் மருந்து விநியோக காலம் முடிந்த பின் அடுத்த டெண்டர் நடைமுறை முடிய மூணு மாற்றங்கள் ஆகும்.அதன் பின் நிறுவனம் மருந்துகள் வழங்க மூன்று மாதங்கள் ஆகும்.எனவே மருந்து சேவை கழகம் ஆறு மாத காலத்திற்கான மருந்துகளை கையிருப்பில் வைத்துக்கொண்டு மருந்துகளுக்கு தடை இன்றி வழங்க வேண்டும்.

அனைத்து மருத்துவர்கள் சார்பில் கேட்டுக்கொள்ளப்படுகிறது.ஆனால் சில அரசு மருத்துவமனைகளில் வங்கி கணக்கிலும் பஞ்சமின்றி பணம் இருக்கின்றது. அவசரத்திற்கு அதற்கான மருந்துகள் மட்டும் கிடைக்கவில்லை.

மருத்துவமனையில் இன்சுரன்ஸ் பணத்தில் உள்ளூரிலேயே மருந்துகளை வாங்கி இந்த நிர்வாகங்கள் சமாளித்து வருகின்றன. அதற்கும் இரண்டு நாட்களுக்கு ஒரு முறை சேவை கழகத்திடம் இருந்து தடையில்லா சான்றிதழ் பெற வேண்டி உள்ளது.

இன்சூரன்ஸ் மூலம் வருவாய் ஈட்டும் பெரிய அரசு மருத்துவமனைகளில் பற்றாக்குறையை சமாளிக்க அந்த வருவாய் மருந்துகளை வாங்கி நோயாளிக்கு வழங்குகிறார்கள். மேலும் வருமானம் இல்லாத மருத்துவமனைகளில் இது பெரிய பிரச்சினையை ஏற்படுத்துகிறது.

ரத்த அழுத்தம் சர்க்கரை நோய், இருதய நோய்களுக்கு மாதந்தோறும் மாத்திரைகள் வழங்கப்பட்டு வருகிறது. ஒவ்வொருவருக்கும் நாலு வித மாத்திரைகள் தரவேண்டும் என்றால் இரண்டு வித மாத்திரைகளை வழங்கி சமாளிக்கின்றனர்.

இது நோயாளிகளின் நோயின் தீவிரத்தை இன்னும் அதிகப்படுத்தி விடும்.டெண்டர் நடைமுறையில் பிரச்சினையோ மருத்துவ சேவை கழகத்தின் மெத்தனமோ ஏதுவாக இருந்தாலும் பாதிக்கப்படுவது பொதுமக்கள் தான்.

அரசு விரைவில் கவனத்தில் எடுத்து கொள்ள வேண்டும். தடையின்றி மருந்துகளை வழங்க மருத்துவ சேவை கழகத்திற்கு உத்தரவிட வேண்டும் என்று நோயாளிகளின் முதல் கோரிக்கையாக உள்ளது.

Previous articleஅதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லாது! நீதிமன்றம் அளித்த அதிரடி தீர்ப்பு!
Next articleசேலம் மாவட்டத்தில் விவேகானந்தா மெட்ரிக் பள்ளி பேருந்தில் சிக்கிய ஒன்றரை வயது குழந்தை! போராட்டத்தில் ஈடுபட்ட அப்பகுதி மக்கள்!