உங்களுக்கு விடப்பட்ட சர்ப்ப சாபத்தில் இருந்து நீங்க எளிய பரிகாரம்!!

0
37
#image_title

உங்களுக்கு விடப்பட்ட சர்ப்ப சாபத்தில் இருந்து நீங்க எளிய பரிகாரம்!!

சாபங்களை நாம் நேரடியாக பெறாவிட்டாலும் நம் முன்னோர்கள் இந்த சாபங்களைப் பெற்றிருந்தால் அது வம்சா வழியாகத் தொடர்ந்து தலைமுறை சாபமாக மாறி நம்மையும் நம் சந்ததியையும் தாக்கிக் கொண்டு தான் இருக்கும்.

இப்படிப்பட்ட சாபங்கள் நம் கஷ்டம் / பிரச்சனைகள் / துன்பம் / துயரம் அனைத்திற்கும் காரணமாக இருந்து நம் முன்னேற்றத்தையும், செல்வ வளத்தையும், புத்திர பாக்கியத்தையும், திருமண யோகத்தையும், கல்வி செல்வத்தையும் இன்னும் பல விதமான விஷயங்களையும் பாதித்து அனைத்திற்கும் தடையாக இருக்கும்.

பல வகையான சாபங்களில் இந்த 11 சாபங்கள் மிகவும் பாதிப்புகள் தரக் கூடியவை. அவை பெண் சாபம், பித்ரு சாபம், பிரம்ம சாபம், சர்ப்ப சாபம், கோ சாபம், கங்கா சாபம், விருக்க்ஷ சாபம், தேவ சாபம், முனி சாபம், ரிஷி சாபம், குல தெய்வ சாபம் ஆகியவை.

இப்படி ஏதும் சாபம் நமக்கு இருக்கிறதோ என்று ஜாதகத்தின் மூலமோ அல்லது வேறு விதத்திலோ கண்டறிந்து அதிலுருந்து விடுபட வேண்டும்.

சர்ப்ப சாபம்: ஏன் நம்மைத் தொடர்கிறது…

நாகங்களை தேவை இல்லாமல் கொல்லுதல், அதன் வாழ்விடத்தை – புற்றுகளை அகற்றுதல், அதன் குட்டிகளைப் பிரிப்பது, தேவை இல்லாமல் அடித்து துன்புறுத்துவது ஆகியவை.

சர்ப்ப சாபம்: என்ன விளைவுகளை ஏற்படுத்தும்..

கால சர்ப்ப தோஷம் ஏற்படுத்தும். திருமணத் தாமதம், குழந்தை பாக்கியம் இல்லாமை ஆகியவை.

சர்ப்ப சாபத்தில் இருந்து விடுபடுவது எப்படி?

காளஹஸ்தி சென்று வழிபாடு செய்வது, ராகு காலத்தில் வழிபாடு செய்வது, நாக சதுர்த்தி அன்று விரதம் இருந்து வழிபாடு செய்வது போன்றவை.

நம் உயிரைக் காக்க ஏதாவது பாம்பை கொலை செய்ய நேரிட்டால் அதைக் கொன்று அப்படியே புதைக்காமல் மஞ்சள் மற்றும் பால் ஊற்றி புதைத்து அதனிடம் மனதார மன்னிப்பு கேட்டு கல்லில் ஒரு நாகர் செய்து அரச மரத்தடியில் வைத்து விட்டு வழிபட்டு வர தலைமுறையாக தொடரும் சாபம் நீங்கும்.