கண் திருஷ்டி நீங்கி பணம் சேர எளிய பரிகாரம்!!
பணத்தை பர்ஸில் இருந்தோ பீரோவில் இருந்தோ யார் முன்பும் எடுக்கக் கூடாது. அது உறவினர்கள் அல்லது நண்பர்கள் யாராக இருந்தாலும் சரி.
கடைகளில் பொருள் வாங்கிப் பணம் கொடுக்கும் போதும் அத்தனை பேர் முன்பு அப்படியே எடுத்துக் கொடுத்து மீதி பணத்தை பர்ஸில் வைக்கக் கூடாது. எல்லா நேரமும் இல்லா விட்டாலும் சில நேரத்தில் இது கண் திருஷ்டிக்கு வழிவகுத்து பணப் புழக்கம் குறைய வாய்ப்பு உள்ளது.
இதில் இருந்து மீண்டு வர மாதம் ஒருமுறை உங்களிடம் உள்ள பணத்தை (எவ்வளவு இருந்தாலும் சரி) அதை ஒரு தட்டில் வைத்து அதை சுற்றி பூக்கள் வைக்கவும்.
பின்பு ஒரு தட்டில் சிறிது தண்ணீர் ஊற்றி மஞ்சள் தூள், சுண்ணாம்பு கலந்து ஆலம் கரைத்து பணம் வைத்திருக்கும் தட்டை சுற்றி 3 முறை மேல் இருந்து கீழாக இறக்கி திருஷ்டி சுற்றி வாசலுக்கு வெளியே ஓரமாக கொட்டவும். பின்பு பணத்தை பீரோவில் வைக்கவும்.
மற்றொரு தீர்வு:-
ஆகாச கருடன் கிழங்கு வாங்கி அதை லேசாக கழுவி முழுவதற்கும் மஞ்சள் தடவி 3 இடத்தில் குங்குமம் வைக்கவும்.
கெட்டியான கயிறு போட்டுக் கட்டி வெளி வாசலில் யார் கையும் தொடாத உயரத்தில் நன்கு கட்டி விடவும்.
அது எப்போது சுருங்கி சுருகிப் போகிறதோ அப்போது அதை மாற்றி குப்பையில் போட்டுப் புதிதாகக் கட்டவும்.
இது மிகவும் சக்தி வாய்ந்த கிழங்கு. இது ஆன்லைனிலும் நாட்டு மருந்துக் கடையிலும் கிடைக்கும். நம் வீட்டில் திருஷ்டி இல்லையென்றாலும், எதிர்மறை ஆற்றல் இல்லையென்றாலும் அந்த கிழங்கில் துளிர் விட ஆரம்பிக்கும். மண், நீர் இல்லாமையே காற்றின் உள்ள ஈரப்பதத்தில் அது வளரும் தன்மை கொண்டது. அந்த நிலை வந்துவிட்டால் பணம் சேர்ந்து கொண்டே இருப்பதை கண் கூடாக பார்க்க முடியும்.
திருஷ்டி, எதிர்மறை ஆற்றல் இருந்தால் அது வாடி கருகி விடும். அப்படி இருந்தால் உடனே அப்புறப்படுத்தி புதிதாக வைக்கவும்.