பழைய தங்க நகைகளை பளிச்சிட செய்யும் சிம்பிள் ட்ரிக்!

0
313
#image_title

பழைய தங்க நகைகளை பளிச்சிட செய்யும் சிம்பிள் ட்ரிக்!

உங்களிடம் உள்ள பழைய தங்கத்தை பாலிஷ் செய்ய கடைகளில் கொடுக்க வேண்டிய அவசியம் இனி ஏற்படாது. காரணம் கீழே கொடுக்கப்பட்டுள்ள ட்ரிக்கை பயன்படுத்தினால் கடைகளில் பாலிஷ் செய்வது போன்று தங்கம் புதிதாக இருக்கும்.

ட்ரிக் 01:

*டூத் பேஸ்ட்
*வினிகர்

ஒரு கிண்ணத்தில் 1 ஸ்பூன் டூத் பேஸ்ட் மற்றும் 1 ஸ்பூன் வினிகர் சேர்த்து கலந்து கொள்ளவும். இதில் தங்க நகைகளை போட்டு 10 நிமிடங்களுக்கு ஊற வைக்கவும்.

பின்னர் ஒரு பிரஷ் கொண்டு ஊறவைத்த தங்க நகைகளை தேய்த்து சுத்தம் செய்தால் அவை புதிதாக வாங்கிய தங்கம் போல் ஜொலித்திடும்.

ட்ரிக் 02:

*மஞ்சள் தூள்
*வாஷிங் பவுடர்

அடுப்பில் ஒரு வாணலி வைத்து அதில் சிறிது தண்ணீர் ஊற்றிக் கொள்ளவும். அடுத்து அதில் அழுக்கு படிந்த தங்க நகைகளை போடவும். பிறகு 1 ஸ்பூன் மஞ்சள் தூள் மற்றும் 1 ஸ்பூன் வாஷிங் பவுடர் சேர்த்து நன்கு கலந்து விடவும்.

தண்ணீர் கொதித்து வருவதற்கு முன்னர் அடுப்பை அணைத்து ஆற விடவும். பின்னர் இதை வேறு பாத்திரத்திற்கு மாற்றி தண்ணீர் ஊற்றி அலசவும். அடுத்து ஒரு பிரஸ் கொண்டு தங்கத்தை சுத்தம் செய்யவும்.

ட்ரிக் 03:

*பூந்தி கொட்டை

ஒரு கிண்ணத்தில் சிறிது பூந்தி கொட்டை சேர்த்து தண்ணீர் ஊற்றி ஊற விடவும். பின்னர் அதில் பழைய தங்கத்தை போட்டு சிறிது நேரம் ஊறவைத்து பிரஷ் கொண்டு தேய்த்தால் புதிது போன்று தங்கம் ஜொலிக்கும்.

ட்ரிக் 04:

*கடலை மாவு
*மஞ்சள்

தண்ணீரில் கடலை மாவு மற்றும் மஞ்சள் சேர்த்து கலந்து தங்கத்தை சேர்த்து 10 நிமிடம் ஊறவைக்கவும். பின்னர் பிரஷ் கொண்டு தங்கத்தை சுத்தம் செய்யவும்.