உடல் எடையை வேகமாக குறைக்க ஒரு எளிமையான வழி! பாதாம் பொடியை இப்படி சாப்பிடுங்க!

Photo of author

By Rupa

உடல் எடையை வேகமாக குறைக்க ஒரு எளிமையான வழி! பாதாம் பொடியை இப்படி சாப்பிடுங்க!
உடல் எடை அதிகமாக இருக்கும் நபர்கள் அனைவரும் உடல் எடையை வேகமாகவும் எளிமையாகவும் குறைப்பதற்கு பாதாம் பொடியை எவ்வாறு சாப்பிட வேண்டும் எப்படி பயன்படுத்த வேண்டும் என்பது குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
பெரும்பாலும் இன்றைய காலத்தில் உடல் எடை அதிகரிப்பது எதனால் என்பது குறித்து யாருக்கும் தெரிவது இல்லை. நம்முடைய உணவுப் பழக்க வழக்கங்கள் தான் ஒருவருடைய உடல் எடை அதிகரிப்பதற்கு காரணமாக இருக்கும். அதாவது அளவோடு சாப்பிட்டு கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும். ஆனால் அப்படி இல்லாமல் ஒரு நாளுக்கு 5 வேலை சாப்பிடுவது, தோன்றும் பொழுது சாப்பிடுவது, நாக்கிற்கு சுவையாக இருக்கும் உணவுகளை மட்டும் சாப்பிடுவது போன்ற காரணங்களால் தான் உடல் எடை அதிகரிக்கின்றது.
உடல் எடை அதிகரிப்பது என்பது வேகமாக நடந்துவிடும். ஆனால் உடல் எடையை குறைப்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. தற்போதைய காலத்தில் பலரும் உடல் எடையை குறைக்க வேண்டும் என்று பலவிதமான முயற்சிகளை பின்பற்றி வருகின்றனர். இருப்பினும் உடல் எடை குறைந்ததா என்று கேட்டால் கேள்விக் குறிதான் மிச்சம். எனவே இந்த பதிவில் உடல் எடையை குறைக்க வேண்டும் என்று கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கும் அனைத்து நபர்களுக்கும் உடல் எடையை எளிமையாக குறைப்பதற்கு எளிய வீட்டு வைத்தியம் ஒன்றை குறித்து பார்க்கலாம்.
அதற்கு தேவையான பொருட்கள்…
* பாதாம் பொடி
* தேன்
செய்முறை…
முதலில் பாதாமை வெயிலில் காய வைத்து பொடியாக்கிக் கொள்ள வேண்டும். அல்லது கடைகளில் விற்பனை செய்யப்படும் பாதாம் பொடியை வாங்கிக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு சிறிய வாணலி ஒன்றை வைத்து அதில் பாதாம் பொடியை போட்டு வறுத்துக் கொள்ள வேண்டும்.
வறுத்த இந்த பொடியை தேவையான அளவு எடுத்து ஒரு சிறிய பவுலில் சேர்த்துக் கொள்ள வேண்டும். பின்னர் இதில் தேன் சிறிதளவு சேர்த்து நன்கு கலந்துவிட்டுக் கொள்ள வேண்டும். இந்த ரெமிடியை காலை நேரத்தில் உணவு சாப்பிட்ட பிறகு சாப்பிட வேண்டும். இதை தொடர்ந்து செய்து வந்தால் எளிமையாக உடல் குறையும்.