மருந்து மாத்திரை இல்லாமலேயே உடலில் ஏற்படும் அனைத்து வலிகளையும் சரி செய்யும் அற்புத காய்!!

மருந்து மாத்திரை இல்லாமலேயே உடலில் ஏற்படும் அனைத்து வலிகளையும் சரி செய்யும் அற்புத காய்!!

நம் உடலில் உள்ள அனைத்து நோய்களுக்கும் ஒரு நிவாராணியாக கொத்தவரங்காய் செயல்படுகிறது. அது எந்தெந்த நோய்களை சரிபடுத்துகிறது என்பதை பார்க்கலாம்.

உடலில் சூடு அதிகமாக இருந்தாலும் சரி, குளிர்ச்சியாக இருந்தாலும் சரி இந்த இரண்டையும் உடலில் சமநிலையாக வைக்கும். 10 கொத்தவரங்காயை எடுத்து தேவையான தண்ணீர் ஊற்றி அரைத்து அந்த சாறை வடிகட்டி எடுத்துக் கொள்ளவும். இந்த ஜூசை தினமும் எடுத்துக்கொண்டால் உடலில் உள்ள அதிகப்படியான சூடு மற்றும் அதிகப்படியான குளிர்ச்சி இரண்டையும் கட்டுப்படுத்தும்

சூட்டினால் ஏற்படும் கண் எரிச்சல், கண்களில் கொப்பளம் இருப்பவர்களுக்கு இந்த ஜூசை கொடுத்து வந்தால் இந்த பிரச்சினைகள் சரியாகும்.

அந்தரங்க இடத்தில் ஏற்படக் கூடிய புண், கொப்பளம், வெடிப்பு, சீழ் மற்றும் ரத்தம் வடிதல் போன்றவற்றிற்கும் இந்த கொத்தவரங்காயை பயன்படுத்தலாம். ஆணிக்கால் இருப்பவர்கள் இந்த ஜூசை எடுத்துக் கொண்டால் ஆணிக்கால் சரியாகும்.

பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் கால வலிகள் அதாவது மாதவிடாய் நேரத்தில் பெண்களுக்கு இடுப்பு வலி அதிகமாக இருக்கும். அந்த 3 நாட்கள் இந்த ஜூசை எடுத்து கொண்டால் சிறிது கூட வலி தெரியாது. மிகவும் தாங்க முடியாத வலி இருந்தால் இதனுடன் ½ எழுமிச்சம் பழச்சாறு கலந்து குடிக்கலாம்.

உடலில் உள்ள அனைத்து வழிகளுக்கும் இந்த கொத்தவரங்காய் ஜூஸ் மட்டும் போதும். தாங்க முடியாத வலியாக இருந்தாலும் 10 கொத்தவரங்காய் ½ எழுமிச்சம் பழம் மட்டும் போதுமானது.

மூச்சு திணறல் ஏற்படுபவர்களுக்கு, அதாவது ஒரு சிலருக்கு குளிர் காலத்தில் மூச்சு திணறல் ஏற்படும் அவர்களுக்கும் இந்த ஜூசை கொடுப்பதன் மூலம் மூச்சு திணறலை கட்டுப்படுத்தலாம்.

பெண்களுக்கு இருக்கும் கர்ப்பப்பை நீர்க்கட்டி இதன் மூலம் சரியாகும்.

குளிர் காய்ச்சல், நடுக்கம், வலி போன்றவற்றையும் சரி செய்யும்.

வாயில் உள்ள புண்னை இந்த ஜூஸ் சரி செய்கிறது,

பல் வலி, ஈறுகளில் வீக்கம் ஆகியவற்றிற்கு கொத்தவரங்காய் ஜூசை வாய் முழுவதும் படுமாறு கொப்பளித்து குடித்து வந்தால் பல் சம்பந்த பட்ட பிரச்சினைகள் சரியாகும்.

ஆசனவாயில் வலி, எரிச்சல் மற்றும்  புண் இருப்பவர்கள் இந்த கொத்தவரங்காய் ஜூசை குடித்து விட்டு, வெண்டைக்காயை பச்சையாக சாப்பிட்டு வந்தால் குணமாகும்.

வெரிகோஸ் வெயின் இருப்பவர்கள் கொத்தவரங்காய்யை பச்சையாக சாப்பிடலாம் அல்லது ஜூஸாகவும் எடுத்துக் கொள்ளலாம். மஞ்சள் பூசணிக்காய் ஜூசையும் எடுத்துக் கொள்ளலாம்.

சர்க்கரை நோய் இருப்பவர்களுக்கு கை, கால் நமச்சல், பாத எரிச்சல், குடைச்சல் போன்றவை இருக்கும். இவர்களுக்கு  இந்த ஜூஸ் கொடுக்கும்போது இந்த பிரச்சினைகள் குறையும்.

அனைத்து விதமான மூட்டு, முதுகு வலிகள், கை, கால் வலிகளையும் இந்த ஜூஸ் சரி செய்கிறது.

மேலும் இந்த ஜூசை சாப்பிடுவதற்கு முன் அல்லது சாப்பிடுவதற்கு பின் என எப்போது வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம். அளவுகளும் அவரவர் விருப்பப்படி எடுத்துக் கொள்ளலாம்.