நாம் பின்பற்றி வரும் மோசமான உணவுமுறை பழக்கமே சர்க்கரை நோய் உருவாக முதன்மை காரணமாக உள்ளது.உணவை நன்றாக மென்று விழுங்காமை,இனிப்பு உணவுகள்,சர்க்கரை அளவை உயர்த்தும் உணவுகள் போன்றவற்றால் உடலில் கெட்ட குளுக்கோஸ் அளவு உயர்கிறது.
எனவே சர்க்கரை அளவு எப்பொழுதும் கட்டுக்குள் இருக்க தற்பொழுது சொல்லப்பட உள்ள நாட்டு வைத்தியத்தை தொடர்ந்து பின்பற்றுங்கள்.
சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்கும் நாட்டு வைத்தியம்:
சின்ன வெங்காயம்
முதலில் இரண்டு சின்ன வெங்காயத்தை தோல் நீக்கிவிட்டு உரலில் போட்டு இடித்து சாறு எடுத்துக் கொள்ளுங்கள்.பிறகு பாத்திரம் ஒன்றில் ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து சூடுபடுத்துங்கள்.
அதன் பிறகு இடித்த சின்ன வெங்காய சாறை அதில் ஊற்றி சிறிது நேரம் கொதிக்க வைத்து வடிகட்டி பருகினால் இரத்தத்தில் உள்ள கெட்ட குளுக்கோஸ் அளவு குறைந்துவிடும்.
வெந்தயம்
கருஞ்சீரகம்
நெல்லிக்காய் வற்றல்
மருதம்பட்டை
முதலில் கிண்ணத்தில் ஒரு தேக்கரண்டி வெந்தயத்தை போட்டு தண்ணீர் ஊற்றி நாள் முழுவதும் ஊறவிடுங்கள்.பிறகு இதை காட்டன் துணியில் போட்டு மூட்டை கட்டி இரண்டு நாட்கள் அப்படியே விடுங்கள்.
பிறகு இதை வாணலியில் போட்டு லேசாக வறுத்து எடுங்கள்.அடுத்து கருஞ்சீரகத்தை வாணலியில் போட்டு லேசாக வறுத்தெடுங்கள்.பிறகு நாட்டு மருந்து கடையில் கிடைக்கும் நெல்லிக்காய் வற்றல் மற்றும் மருதம்பட்டையை சம அளவு வாங்கிக் கொள்ளுங்கள்.
இந்த நான்கு பொருட்களையும் மிக்சர் ஜாரில் போட்டு அரைத்து பொடியாக்கி கொள்ளுங்கள்.பிறகு பாத்திரம் ஒன்றில் ஒரு கப் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து சூடுபடுத்துங்கள்.
பிறகு அரைத்து வைத்துள்ள பொடி ஒரு தேக்கரண்டி அளவு போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி பருகினால் இரத்த சர்க்கரை அளவு குறையும்.