இன்றைய நவீன காலகட்டத்தில் ஸ்மார்ட் போன் பயன்பாடு மளமளவென அதிகரித்துவிட்டது.தற்பொழுது ஸ்மார்ட் போன் இல்லாத வீடே இல்லை.இது நம் வளர்ச்சியை குறிக்கிறது என்றாலும் இந்த தொழில்நுட்ப வளர்ச்சியே நமக்கு பெரும் ஆபத்தாக மாறி வருகிறது என்பது நமக்கு உணர்த்தும் எச்சரிக்கையாக இருக்கிறது.
ஸ்மார்ட் போன் மூலம் நமக்கு பலவித நன்மைகள் கிடைக்கிறது என்றாலும் சிலர் இதை தவறாக பயன்படுத்தி வருவதால் அது அவர்களின் எதிர்கால வாழக்கையை கடுமையாக பாதிக்கிறது என்பதை அவர்கள் உணர்வதில்லை.
இன்றைய தலைமுறையினரிடையே ஸ்மார்ட் போன் மீதான மோகம் அதிகரித்து வருகிறது.அதேவேளை ஸ்மார்ட் போனால் பல தீய விளைவுகளும் அரங்கேறி வருகிறது.சிலர் மணிக்கணக்கில் போன் பயன்படுத்தும் பழக்கம் கொண்டிருக்கிறார்கள்.தொடர்ந்து ஸ்மார்ட் போன் பயன்படுத்தினால் கண்வலி,கண் எரிச்சல்,கண் பார்வை குறைபாடு போன்ற பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.
ஒருவர் நாளொன்றில் நான்கு மணி நேரத்திற்கு அதிகமாக போன் பயன்படுத்தினால் அவர்களுக்கு மன அழுத்தம் ஏற்படும் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.தொடர்ந்து மொபைல் பயன்பாட்டை அதிகரித்தால் நமக்கு சிந்திக்கும் திறன் குறைந்துவிடும்.குடி பழக்கம் எப்படி உடல் நலத்திற்கு கேடு என்று சொல்லப்படுகிறதோ அதேபோல் தான் செல்போன் பயன்பாடும் நம் ஆரோக்கியத்தை முழுமையாக பாதிக்கிறது.
தொடர்ந்து செல்போன் பயன்படுத்தினால் அதன் மீது மட்டும் நாட்டம் அதிகரிக்குமே தவிர மற்ற விஷயங்களில் ஈடுபாடு குறைந்துவிடும்.தொடர்ந்து செல்போன் பயன்படுத்தி வந்தால் மனசோர்வு,பதட்டம்,தூக்கமின்மை போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.
நீண்ட நேரம் ஸ்மார்ட் போன் பயன்படுத்தினால் மூளையின் செயல்பாடு குறைந்துவிடும்.நீங்கள் தொடர்ந்து ஸ்மார்ட் போன் பயன்படுத்துவதில் மட்டும் ஆர்வத்தை காட்டிவந்தால் அது உங்களுக்கு நெருக்கமான உறவை இழக்கச் செய்துவிடும்.ஸ்மார்ட் போன் அதிக நேரம் பயன்படுத்தினால் நினைவாற்றல் குறையத் தொடங்கும்.படித்ததை ஞாபகத்தில் வைத்துக் கொள்வது கடிமனாகிவிடும்.எனவே ஸ்மார்ட் போனை நல்ல விஷயங்களுக்கு மட்டும் பயன்படுத்த தொடங்குங்கள்.அதிக நேரம் ஸ்மார்ட் போன் பயன்படுத்துவதை தவிர்த்துக் கொள்ளுங்கள்.