சரும நோய்களில் ஒன்றான படர் தாமரையை குணமாக்க உதவும் அற்புத வீட்டு வைத்திய குறிப்புகள் இதோ.
தீர்வு 01:
நெய் – ஒரு தேக்கரண்டி
கருப்பு மிளகு – நான்கு
முதலில் நான்கு கருப்பு மிளகை உரலில் போட்டு லேசாக தட்டி கொள்ள வேண்டும்.அடுத்து அடுப்பில் வாணலி வைத்து ஒரு தேக்கரண்டி நெய் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.பின்னர் இடித்த கருப்பு மிளகை அதில் போட்டு ஒரு நிமிடம் சூடாக்க வேண்டும்.
அடுப்பை அணைத்த பிறகு இதை ஆறவைத்துக் கொள்ள வேண்டும்.அதன் பிறகு இந்த எண்ணையை படர்தாமரை மீது அப்ளை செய்தால் பாதிப்பு சீக்கிரம் குணமாகும்.
தீர்வு 02:
வினிகர் – ஒரு தேக்கரண்டி
உப்பு – சிறிதளவு
கிண்ணம் ஒன்றில் வினிகர் ஒரு தேக்கரண்டி அளவு சேர்த்துக் கொள்ள வேண்டும்.அடுத்து அதில சிறிதளவு உப்பு சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும்.இதை படர் தாமரை மீது அப்ளை செய்தால் அவை சில தினங்களில் மறைந்துவிடும்.
தீர்வு 03:
கடுகு எண்ணெய் – இரண்டு தேக்கரண்டி
பூண்டு – ஒரு பல்
அடுப்பில் வாணலி வைத்து இரண்டு தேக்கரண்டி கடுகு எண்ணெய் ஊற்றி சூடுபடுத்திக் கொள்ள வேண்டும்.அடுத்து அதில் ஒரு பல் வெள்ளைப்பூண்டை போட்டு சூடாக்க வேண்டும்.
இந்த எண்ணையை ஆறவைத்து படர் தாமரை மீது வைத்து அப்ளை செய்தால் அவை சீக்கிரம் குணமாகும்.
தீர்வு 04:
குப்பைமேனி இலை – சிறிதளவு
தேங்காய் எண்ணெய் – இரண்டு தேக்கரண்டி
வாணலி ஒன்றில் தேங்காய் எண்ணெய் இரண்டு தேக்கரண்டி அளவு சேர்த்துக் கொள்ள வேண்டும்.பின்னர் அதில் குப்பைமேனி இலையை போட்டு காய்ச்ச வேண்டும்.
இதை ஆறவைத்து படர் தாமரை மீது தடவினால் நல்ல நிவாரணம் கிடைக்கும்.குப்பைமேனி இலை சருமம் சார்ந்த பாதிப்புகள் அனைத்தையும் குணப்படுத்தும்.