இதில் ஒரு ஸ்பூன் எடுத்துக் கொண்டால் போதும்! ஹைப்பர் தைராய்டு குணமாக! 

0
343

இதில் ஒரு ஸ்பூன் எடுத்துக் கொண்டால் போதும்! ஹைப்பர் தைராய்டு குணமாக! 

தைராய்டு ஹார்மோன் அளவுக்கு அதிகமாக சுரக்கும் நிகழ்வு தான் ஹைப்பர் தைராய்டிசம். இது வருவதற்கான முக்கிய காரணம் கண்ட கண்ட மருந்து மாத்திரைகள் அதிகம் எடுத்துக் கொள்வது, உப்பு அதிகம் உள்ள பொருட்களை சேர்ப்பது, புகைப்பிடிப்பது, மன அழுத்தம் ஆகிய காரணங்களாக அமைகின்றன.

ஹைப்பர் தைராய்டு எளிமையான முறையில் கட்டுப்படுத்தக்கூடிய வீட்டு வைத்திய முறையை பார்ப்போம்.

ஒரு மிக்ஸி ஜாரில் ஒரு ஸ்பூன் ஓமம் ஒரு ஸ்பூன் வெந்தயம் மற்றும் இரண்டு பட்டைகளை போட்டு பவுடர் ஆக்கவும். மூன்றின் அளவுகளும் சமமாக இருக்க வேண்டும். நமக்கு தேவையான அளவு தயார் செய்து கொண்டால் போதுமான நாட்கள் வைத்து பயன்படுத்தலாம்.

அரைத்த பவுடரை ஒரு காற்று புகாத பாட்டிலில் சேமித்து வைக்கலாம்.

அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் ஒரு டம்ளர் நீரை ஊற்றவும். அரைத்து வைத்த பொடியில் இருந்து ஒரு ஸ்பூன் எடுத்து அதில் போடவும். ஓரளவு நன்றாக கொதிந்ததும் இதை வடிகட்டி வைத்துக் கொள்ளவும்.

இதை தினமும் காலை சாப்பிடுவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பு குடித்து வரவேண்டும். இதே போல் மூன்று மாதங்கள் தொடர்ந்து குடித்தால் உங்களுக்கு இருக்கும் ஹைப்பர் தைராய்டிசம் பிரச்சனை கூடிய விரைவில் கட்டுக்குள் வரும்.

இந்த பிரச்சனைக்காக மருந்து மாத்திரை எடுத்து வருபவர்கள் அதனை நிறுத்தக்கூடாது. கூடவே இந்த பானத்தையும் சேர்த்து குடித்து வர கூடிய விரைவில் உங்களுக்கு நிவாரணம் கிடைக்கும்.

இது ஹைப்பர் தைராய்டிசை குறைப்பதோடு மட்டுமல்லாமல் அதன் விளைவுகளான முடி உதிர்தல், கழுத்து பகுதி வீக்கம், தூக்கமின்மை, மூச்சு விடுதலில் சிரமம், வயிற்றுப்போக்கு, பசியின்மை, பெண்களுக்கு ஏற்படும் சீரற்ற மாதவிடாய் சுழற்சி, அதிக வியர்வை, படபடப்பு போன்றவற்றையும் போக்கும். இதை மூன்று மாதங்கள் மட்டும் தொடர்ந்து குடித்தால் போதுமானது. எண்ணிலடங்கா பயன்களைத் தரும்.

 

Previous articleவாரத்திற்கு இரண்டு நாட்கள் மட்டும் இந்த பானத்தை குடித்து பாருங்கள்!  நீங்கள் டாக்டரிடம் செல்ல வேண்டிய அவசியம் இருக்காது! 
Next articleமேஷம்-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு மனதில் தைரியம் அதிகரிக்கும் நாள்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here