இந்த ஒரு ஸ்பூன் போதும் மலச்சிக்கல் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு!!

Photo of author

By Rupa

இந்த ஒரு ஸ்பூன் போதும் மலச்சிக்கல் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு!!

Rupa

இந்த ஒரு ஸ்பூன் போதும் மலச்சிக்கல் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு!!

மலச்சிக்கல் உங்களுக்கு பல சிக்கல்களை தருகிறதா… அந்த மலச்சிக்கலை சரி செய்ய அற்புதமான மருந்து இதோ…

பிதாமகன் திரைப்படத்தில் நடிகர் சூரியா கூறுவது போல மலச்சிக்கல் மனிதனுக்கு பலச் சிக்கல்களை ஏற்படுத்துகிறது. அந்த மலச்சிக்களை எவ்வாறு குணப்படுத்துவது அதற்கு என்ன மருந்து என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

ஒவ்வொருவரும் தினமும் காலையில் மாலையில் என இரு வேலைகளிலும் மலம் கழிக்க வேண்டும். இல்லையெனில் இது நமது உடலில் பல நோய்களை ஏற்படுத்தும். மலச்சிக்கல் தான் மூல நோய் ஏற்படுவதற்கு காரணமாகின்றது.

மலச்சிக்கல் குணமடைய நார்ச்சத்துக்கள் உள்ள உணவுகளை சாப்பிட வேண்டும். மேலும் வாழைத்தண்டு, சத்தான காய்கறிகள், பப்பாளி இதையெல்லாம் சாப்பிட வேண்டும். இப்பொழுது இந்த மலச்சிக்கலை நாட்டு வைத்திய முறைப்படி எவ்வாறு குணப்படுத்துவது என்று பார்க்கலாம்.

இதை செய்யத் தோவையான பொருட்கள்

* சீரகம்

* ஓமம்

* கடுக்காய்

* நிலாவறை

செய்முறை

எடுத்து வைத்துள்ள சீரகம், நிலாவறை, ஓமம், கடுக்காய் இவை எல்லாவற்றையும் சேர்த்து பொடி செய்து வைத்துக் கொள்ள வேண்டும். இரவு தூங்கச் செல்லும் முன்பு ஒரு டம்ளர் சுடு தண்ணீரில் ஒரு ஸ்பூன் அளவு இந்த பொடியை கலந்து குடிக்க வேண்டும். இவ்வாறு செய்தால் மறுநாள் காலையில் மலச்சிக்கல் என்ற ஒரு பிரச்சனை இருக்காது.