கோடை காலம் தொடங்கும் முன்பே வெயில் வாட்டி எடுத்து வருகிறது.பகல் நேரத்தில் வெளியில் சென்று வரவே அச்சமாக இருக்கிறது.கடந்த காலத்தைவிட இந்த கோடை காலம் மிகவும் மோசமாக இருக்கும் என்பதை இந்த மார்ச் ஆரம்பமே நமக்கு உணர்த்திவிட்டது.
இன்னும் பங்குனி மாதமே வரவில்லை.ஆனால் அதற்குள் கடுமையான வெயில் நம் உடலை சோர்வாக்கி வருகிறது.உடலில் இருந்து அதிக வியர்வை வெளியேறுவதால் களைப்பு ஏற்படுகிறது.எனவே உடலை புத்துணர்வுடன் வைத்துக் கொள்ள நன்னாரி சர்பத் செய்து குடிங்க.
தேவையான பொருட்கள்:-
**நன்னாரி பொடி – ஒரு தேக்கரண்டி
**வெல்லப்பாகு – இரண்டு தேக்கரண்டி
**எலுமிச்சை சாறு – இரண்டு தேக்கரண்டி
**தண்ணீர் – ஒரு கிளாஸ்
செய்முறை விளக்கம்:-
1)நாட்டு மருந்து கடையில் நன்னாரி பொடி கிடைக்கும்.50 கிராம் அளவிற்கு இந்த பொடியை வாங்கி வைத்துக் கொள்ளுங்கள்,
2)பிறகு ஒரு கிளாஸ் எடுத்து ஒரு தேக்கரண்டி அளவு வாங்கி வந்த நன்னாரி பொடி சேர்த்துக் கொள்ளுங்கள்.அடுத்து அதில் தண்ணீர் ஊற்றி இரவு முழுவதும் ஊறவிடுங்கள்.
3)பிறகு மறுநாள் காலையில் அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து இரண்டு தேக்கரண்டி அளவு வெல்லத் தூள் சேர்த்துக் கொள்ளுங்கள்.இதில் ஐந்து தேக்கரண்டி தண்ணீர் ஊற்றி குறைந்த தீயில் பாகு காய்ச்சுங்கள்.
4)வெல்லப் பாகு தயாரானதும் அடுப்பை அணைத்துவிடுங்கள்.அதன் பிறகு ஊறவைத்த நன்னாரி தண்ணீரை அதில் ஊற்றி நன்றாக மிக்ஸ் செய்யுங்கள்.
5)பிறகு எலுமிச்சம் பழம் ஒன்றை நறுக்கி அதில் பாதியை எடுத்து சாறு பிழிந்து கொள்ளுங்கள்.இதை நன்னாரி நீரில் ஊற்றி நன்கு மிக்ஸ் செய்து கொள்ளுங்கள்.
6)பிறகு இந்த நன்னாரி நீரை ஒரு பாட்டிலில் ஊற்றி பிரிட்ஜில் வைத்து குளிரவிடுங்கள்.இந்த நன்னாரி சர்பத்தை தேவைப்படும் பொழுது ஒரு கிளாஸ் நீரில் கலந்து பருகலாம்.வெயில் காலத்தில் உடல் சோர்வு,உடல் களைப்பு ஏற்படும் சமயத்தில் இந்த நன்னாரி சர்பத் குடித்தால் உடல் புத்துணர்வாக இருக்கும்.