உங்கள் முகம் வெள்ளையாக மாற ஒரு ஸ்பூன் தக்காளி சாறு போதும்! இதை எவ்வாறு பயன்படுத்துவது!!

0
91
a-spoonful-of-tomato-juice-is-enough-to-turn-your-face-white-how-to-use-it
a-spoonful-of-tomato-juice-is-enough-to-turn-your-face-white-how-to-use-it

உங்கள் முகம் வெள்ளையாக மாற ஒரு ஸ்பூன் தக்காளி சாறு போதும்! இதை எவ்வாறு பயன்படுத்துவது!!

முகத்தில் கரும் புள்ளிகள்,பருக்கள் காணப்பட்டால் அழகு குறைந்து விடும்.ஆண்,பெண் யாராக இருந்தாலும் முகத்தை வெள்ளையாக வைத்துக் கொள்ள தான் ஆசைப்படுவார்கள்.அதற்காக விளம்பரங்களில் காணக் கூடிய கெமிக்கல் நிறைந்த க்ரீம்களை பயன்படுத்தத் தொடங்கி விடுகின்றனர்.

இந்த வகை க்ரீம்களால் எந்த ஒரு பயனும் இல்லை.சருமப் பிரச்சனைகள் தான் ஏற்படும்.எனவே கெமிக்கல் கலந்த க்ரீம்,பேஸ் வாஷ் பயன்படுத்துவதை தவிர்த்து வீட்டில் உள்ள பொருட்களை கொண்டு இயற்கையான பேஸ் வாஷ் தயாரித்து பயன்படுத்துங்கள்.

தேவையான பொருட்கள்:-

1)தக்காளி
2)தேன்
3)கஸ்தூரி மஞ்சள்
4)ரோஸ் வாட்டர்

செய்முறை:-

ஒரு தக்காளி பழத்தை இரண்டாக நறுக்கி மிக்ஸி ஜாரில் போட்டு மைய்ய அரைத்துக் கொள்ளவும்.

இதை ஒரு கிண்ணத்தில் போட்டுக் கொள்ளவும்.பிறகு அதில் 1/4 தேக்கரண்டி தேன்,1/4 தேக்கரண்டி கஸ்தூரி மஞ்சள் தூள் மற்றும் 1/2 தேக்கரண்டி ரோஸ் வாட்டர் சேர்த்து நன்கு பேஸ்ட் போல் கலக்கி கொள்ளவும்.

இந்த பேஸ்டை முகம் முழுவதும் அப்ளை செய்து சிறிது நேரம் மசாஜ் செய்யவும்.1/2 மணி நேரம் கழித்து குளிர்ந்த நீர் கொண்டு முகத்தை கழுவவும்.இவ்வாறு தினமும் காலை மாலை என இரு நேரம் செய்து வந்தால் முகத்தில் உள்ள கருமை,பருக்கள் நீங்கி முகம் மிருதுவாகவும்,வெள்ளையாகவும் மாறும்.