பிரபல நடன அழகிகளுக்கு கத்தி குத்து! வாலிபரை துப்பாக்கி முனையில் தூக்கிய போலீசார்!

0
108
A stab at famous dancing beauties! The police raised the teenager at gunpoint!
A stab at famous dancing beauties! The police raised the teenager at gunpoint!

பிரபல நடன அழகிகளுக்கு கத்தி குத்து! வாலிபரை துப்பாக்கி முனையில் தூக்கிய போலீசார்!

அமெரிக்காவின் நெவாடா மாகாணம் லாஸ் வேகாஸ் நகரில் உள்ள கேளிக்கை விடுதிகள் மற்றும் பார்கள் உள்ளிட்டவற்றில் மக்கள் அதிகளவில் வந்து செல்கின்றனர்.அதனால் அந்த பகுதியில் கூட்டம் நிறைந்து காணப்படுகின்றது.இந்நிலையில் கிளார்க் நகர வீதியில் நடன அழகிகள் கவர்ச்சி நடனம்மாடும் நிகழ்ச்சி மேடையில் நடந்து கொண்டிருந்தது.அப்போது அங்கு வந்த நபர் ஒருவர் கையில் கத்தியுடன் நடன அழகிகளுடன் சேர்ந்து புகைப்படம் எடுக்க வேண்டும் என நிகழ்ச்சி ஏற்பாட்டாளரிடம் கேட்டுள்ளார்.

ஆனால் கையில் கத்தி வைத்திருப்பதை கண்டு புகைபடம் எடுக்க முடியாது என கூறி மறுத்துவிட்டார்.அதனால் ஆத்திரம் அடைந்த அந்த நபர் அங்குள்ளவர்களை மீறி நடன அழகிகளை நெருங்கி சென்றார். அப்போது அவர் திடீரென அவர் மறைத்து வைத்திருந்த கத்தியால் நடன அழகிகளை சரமாரியாக குத்தி தாக்கியுள்ளார்.

மேலும் இத்தனை கண்ட மக்கள் பதற்றம் அடைந்து அங்கும் இங்கும் அலறி அடித்து ஓடினார்கள்.மேலும் அந்த நபர் அவருடைய கண்ணில் பட்டவர்களையெல்லாம் சரமாரியாக குத்தினார்.இந்த சம்பவத்தில் நடன அழகிகள் இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே துடிதுடிக்க உயிரிழந்தனர்.மேலும் ஆறு பேர் பலத்த காயம் அடைந்தனர்.

அதனைத்தொடர்ந்து கத்துகுத்து தாக்குதல் குறித்து போலீசார்க்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கொலையாளியை துப்பாக்கி முனையில் மடக்கி பிடித்தனர்.அவரை கைது செய்த போலீசார் அவர் யார் அவருடைய பின்னணியில் இருபவர்கள் யார் மற்றும் இந்த கத்தி குத்திற்கு என்ன காரணம் என்பதனை பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

author avatar
Parthipan K