மீண்டும் வேலையைக் காட்டும் வடிவேலு… லைகா நிறுவனம் அதிருப்தி!

0
118

மீண்டும் வேலையைக் காட்டும் வடிவேலு… லைகா நிறுவனம் அதிருப்தி!

பல வருட இடைவெளிக்குப் பிறகு வடிவேலு கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ். இம்சை அரசன் 23ம் புலிகேசி படத்தின் இரண்டாம் பாக பிரச்சனையால் நடிகர் வடிவேலுக்கு ரெட் கார்டு தடை விதிக்கப்பட்டது. அதன் காரணமாக கடந்த சில ஆண்டுகளாக எந்த திரைப்படங்களிலும் நடிக்கவில்லை. பல கட்ட பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு விதிக்கப்பட்டிருந்த ரெட் கார்டு தடையை சமீபத்தில் தான் நீக்கியது தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம். இந்நிலையில் தற்போது மீண்டும் திரைப்படங்களில் நடிக்க துவங்கியுள்ளார்.

ஆனால் இம்சை அரசன் 24 ஆம் புலிகேசி திரைப்படத்துக்கு அவர் ஏற்படுத்திய நஷ்டம் காரணமாக லைகா நிறுவனத்துக்கு சம்பளம் இல்லாமல் தொடர்ந்து 2 படங்கள் நடிக்க வேண்டும் என ஒப்பந்தம் போடப்பட்டது. அதையடுத்து அவர் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தில் நடித்து முடித்துள்ளார். இதற்கிடையில் நகைச்சுவை நடிகராக மாமன்னன் மற்றும் சந்திரமுகி 2 ஆகிய படங்களிலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில் நாய்சேகர் படத்துக்குப் பிறகு மீண்டும் லைகா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனத்துக்கு படம் நடிக்காமல் வேறு படங்களில் நடிக்க ஆர்வம் காட்டுகிறாராம் வடிவேலு. இதனால் லைகா நிறுவனம் வடிவேலு மீது அதிருப்தியில் உள்ளதாக சொல்லப்படுகிறது. விரைவில் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ள நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் திரைப்படத்தின் ஓடிடி உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.