இந்திய அணியின் முக்கிய வீரர்களில் ஒருவர் ஸ்ரேயர்ஸ் ஐயர் இவர் ஐ பி எல் 2024 ல் சரியான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை என்றாலும் அவர் இந்த வருஷ சீசனில் கோப்பையை கொல்கத்தா அணிக்கு வென்று கொடுத்தார். ஆனால் இந்த முறை அவரை kkr அணி நிர்வாகம் தக்க்வைக்கவில்லை ஏலத்தில் வாங்க முன் வரவும் இல்லை.
ஆனால் நடந்து முடிந்த ஐ பி எல் மெகா ஏலத்தில் அதிக தொகைக்கு வாங்கப்பட்ட வீரர்களில் பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடித்தார். இந்த முறை அவரை பஞ்சாப் அணி வாங்கியது அதில் அவரை 26.75 கோடிக்கு வாங்கியுள்ளது. இதுதான் மொத்த ஐ பி எல் ஏலத்தில் அதிக தொகைக்கு வாங்கப்பட்ட வீரர்களில் இரண்டாம் இடம். முதலில் பண்ட் தான் இருக்கிறார்.
மேலும் இவர் தற்போது உள்ளூர் போட்டிகளில் விளையாடி வருகிறார். இவர் தேசிய டெஸ்ட் தொடர் போட்டிக்கான ரஞ்சி கோப்பை தொடரிலும், சையது முஷ்டாக் அலி தொடரிலும் விளையாடி வருகிறது. மேலும் டி 20 மற்றும் ஒரு நாள் போட்டி தொடர்களில் விளையாடி ரன்களை குவித்து வந்துள்ளார். இந்நிலையில் அடுத்து இங்கிலாந்து உடன் நடக்க உள்ள டி 20 மற்றும் ஒருநாள் தொடர் அடுத்து சாம்பியன்ஸ் கோப்பை தொடர் போன்ற போட்டிகளிலும் அவர் மீண்டும் அணியில் இடம் பெறுவார் என்ற தகவல் வெளியாகி வருகின்றன.