அமைச்சர் வி.செந்தில் பாலாஜி வெளியிட்ட அறிக்கை! தமிழகத்தில் மின் கட்டணம் உயர்வு!
மின்சாரத்துறை அமைச்சர் வி.செந்தில் பாலாஜி சென்னையில் நேற்று செய்தியாளர்களும் பேசினார் அப்போது மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திற்கு வழங்கியுள்ள பரிந்துரைகள் குறித்து கூறினார். மேலும் தமிழகத்தில் 100 யூனிட் வரையிலான மின்சார தொடர்ந்து விலையில்லாமல் வழங்கப்படும் வீட்டின் நுகர்வோர் நிலை கட்டணமாக இரு மாதங்களுக்கு ரூபாய் 20 முதல் 50 வரை செலுத்தி வருகின்றன இந்த கட்டணத்தில் இருந்து விலக்களிக்கப்படுகிறது பேரவை தேர்தலை ஒட்டி இதற்கான வாக்குறுதி திமுக கூறியிருந்தது. இந்த அறிவிப்பால் 2 கோடி வீட்டு முன்னோர்கள் பயன்பெறுவர் குடிசை விவசாயி கைத்தறி விசைத்தறி மற்றும் வழிபாட்டுத்தலங்கள் முதலிய மின் கட்டண பிரிவுக்கு வழங்கப்பட்டு வரும் மின்சார மானியம் தொடரும் எனவும் கூறினார்.
மேலும் 200 முதல் 500 யூனிட் வரை இரு மாதங்களுக்கு பயன்படுத்துவதற்கு ஒரு மாதத்திற்கு ரூபாய் 27 என்ற அடிப்படையில் கூடுதல் கட்டணம் செலுத்த பரிந்துரைக்கப்பட்டுள்ளது அதாவது மின் கட்டணம் செலுத்தும் போது 55 கூடுதலாக செலுத்த வேண்டும். மேலும் இரண்டு மாதங்களுக்கு 300 யூனிட் வரையிலான பயன்பாடுகள் மாதத்திற்கு ரூ 72 மற்றும் 400 யூனிட்டுகள் வரை மாதத்திற்கு 127 உயர்த்த பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. மொத்தம் 500 யூனிட்டுகள் வரை பயன்படுத்தினால் மாதத்திற்கு 297 ரூபாய் கூடுதலாக செலுத்த பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
மேலும் 600 யூனிட்டுகள் வரை மின் நுகர்வோர் செய்தால் மாதத்துக்கு ரூ.155 வரையிலான பயன்பாடுகளுக்கு மாதம் 2075 ரூபாய் எனவும் 800 யூனிட்டுகளுக்கு 565 கட்டணத்தை உயர்த்தி பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. மேலும் வீட்டு பயன்பாடு காண மின்சாரத்தில் 500 யூனிட்டுகள் வரை பயன்படுத்தினால் மொத்தம் 1130 ரூபாய் வசூலிக்கப்படுகிறது ஆனால் மின் நுகர்வோர் ஆனது 500 யூனிட்டில் இருந்து 110 ஆக அதிகரிக்கும் போது மின் கட்டணத்தை தொகையானது 1786 ஆக வசூலிக்கப்படுகிறது இந்த வேறுபாடுகள் முற்றிலும் ரத்து செய்யப்பட்டு. ஒரே மின் கட்டணம் மாற்றியமைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
மேலும் ஊரக மற்றும் கிராமப்புறங்களில் இயங்கி வரும் நூலகங்களுக்கான மின் கட்டணம் யூனிட்டுக்கு 5.75 ஆகவும் நிலை கட்டணமாக மாதத்திற்கு 60 வசூலிக்கப்படுகிறது வணிக இயங்காத நூல்களுக்கான மின் கட்டத்தினை 30 சதவீதம் குறைப்பதற்கு வழி வகை செய்யப்பட்டுள்ளது. மேலும் விசைத்தறிகளுக்கு 750 யூனிட் வரை இலவச மின்சாரம் தொடர்ந்து வழங்கப்படும் அதற்கு மேல் யூனிட்டுக்கு 70 பைசா உயர்த்தப்படும் உயர் மின்னழுத்த தொழிற்சாலைக்கான மின் கட்டணத்தில் யூனிட்டுக்கு 40 காசுகள் உயர்த்த பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. ரயில்வே அரசு கல்வி நிறுவனங்களுக்கான மின் கட்டணம் யூனிட்டுக்கு 50 காசுகள் உயர்த்தப்படுகிறது.
மேலும் வீட்டு மின் பயன்பாட்டாளர் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட மின்சார கட்டணத்தை இணையதளம் மூலம் கட்டாயமாக செலுத்த வேண்டும். மருத்துவர்கள் பொறியாளர்கள் உள்ளமைப்ப . வழக்கறிஞர்கள் போன்ற பணிகளை செய்வோர் தங்களது தொழில் முறை பணிக்கு வீட்டில் 200 சதுர அடி வரை பயன்படுத்தலாம் வீட்டு உபயோகப்படும் மின் மானியத்தை பலமுறை பெறுவதை தடுக்க பொதுமின் இணைப்புக்கான விளக்குகள் மின் தூக்கி, நீர் வளங்கள் போன்ற அமைப்புகள் தனியாக விகித பட்டியல் உருவாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் அமைச்சர் வி செந்தில் பாலாஜி அறிவிப்பு ஒன்ற வெளியிட்டார் அந்த அறிவிப்பில் மின் மானியத்தை விட்டுக் கொடுக்கும் திட்டத்தை அமல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. உபயோகிப்பாளர்களுக்கு 100 யூனிட் வரை இலவச மின்சாரம் அளிக்கப்படுகிறது மின் மானியத்தை தாமாக விட்டுக் கொடுக்கலாம் இதற்கான திட்டத்தை அமல்படுத்த ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. அமைச்சர் வி செந்தில் பாலாஜி இது போன்ற நடவடிக்கைகள் மின் வாகனங்களை ஊக்குவிக்கும் வகையில் அமைகிறது என கூறினார்.