பரபரப்பு! தற்கொலை செய்து கொண்ட கள்ளக்குறிச்சி மாணவியின் கடிதம் வெளியானது!

0
123

கள்ளக்குறிச்சி மாவட்டம் கணியம்பூர் கிராமத்தில் இயங்கி வந்த தனியார் பள்ளியில் கடலூர் மாவட்டம் பெரிய நசலூர் கிராமத்தைச் சார்ந்த 17 வயது சிறுமி ஸ்ரீமதி விடுதியில் தயங்கி 12ம் வகுப்பு படித்து வந்தார்.

இந்த சூழ்நிலையில், மாணவி கடந்த 13ஆம் தேதி இரவு பள்ளியின் விடுதி மாடியிலிருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன் காரணமாக, அந்த மாணவியின் மரணத்தில் பல சந்தேகங்கள் இருப்பதாக அந்த மாணவியின் பெற்றோரும் மற்றும் உறவினர்களும் போராட்டம் நடத்தி வந்தனர். இந்த நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த போராட்டம் திடீரென்று வன்முறையாக வெடித்தது.

காவல்துறையினரை தாக்கி கற்களை வீசி சிலர் வன்முறை செய்ததாக தெரிவிக்கப்படுகிறது. ஆகவே காவல்துறையினர் தடியடி நடத்தி அவர்களை கலைக்க முயற்சி செய்தார்கள்.

மேலும் பள்ளிப் பேருந்துகளுக்கு பாராட்டக்காரர்கள் தீ வைத்ததன் காரணமாக, அந்த பகுதியில் பரபரப்பு உண்டானது. கலவரத்தை கட்டுக்குள் கொண்டு வரும் நோக்கத்தில் கள்ளக்குறிச்சி தாலுகா முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு மாவட்ட ஆட்சியாளர் ஸ்ரீதர் தரப்பில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

வன்முறை நடைபெற்ற இடத்தை உள்துறை செயலாளர் பணீந்தர் ரெட்டி மற்றும் காவல்துறை தலைமை இயக்குனர் சைலேந்திரபாபு உள்ளிட்டோர் பார்வையிட்டனர். அந்த சமயத்தில் பேசிய டிஜிபி சைலேந்திரபாபு இந்த வழக்கு சிவிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது என தெரிவித்தார்.

மேலும் அந்த மாணவி மரணம் குறித்து அந்த பள்ளியின் தாளாளர், முதல்வர், செயலாளர், உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர் எனவும் அந்த மாணவியின் மரணம் தொடர்பாக நேற்று மீண்டும் வேதியியல் ஆசிரியை ஹரிப்பிரியா, கணித ஆசிரியை கீர்த்திகா, உள்ளிட்டோரும் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். இந்த சம்பவம் குறித்து சிபிசிஐடி நேற்றைய தினம் விசாரணையை ஆரம்பித்திருக்கிறது.

இந்த நிலையில், அந்த மாணவி தற்கொலை செய்து கொண்டதாக தெரிவிக்கப்படுகின்ற நிலையில் அவர் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பாக கைப்பட எழுதி வைத்திருந்த கடிதத்தை காவல்துறையினர் கைப்பற்றினர். அந்த கடிதத்தை தற்போது காவல்துறையினர் வெளியிட்டிருக்கிறார்கள்.

அதில் தன்னை வேதியியல் துறை ஆசிரியர். கணித ஆசிரியர் என இருவரும் தனக்கு தொந்தரவு கொடுத்ததாகவும். தான் நன்றாக படித்ததாகவும், ஆனாலும் படிக்கவில்லை என்று தெரிவித்து இந்த 2 ஆசிரியர்களும் தன்னை துன்புறுத்தி வந்ததாகவும், அந்த கடிதத்தில் இறந்து போன மாணவி ஸ்ரீமதி குறிப்பிட்டிருக்கிறார்.

அதோடு தான் சரியாக படிப்பதில்லை என்று மற்ற ஆசிரியர்களிடம் அவதூறாக பரப்பியதாகவும், அந்த மாணவி குற்றம் சுமத்தியிருக்கிறார். அதோடு தன்னுடைய தாய் தந்தையிடம் மன்னிப்பு கேட்டு அவர் அந்த கடிதத்தை முடித்திருக்கிறார். இந்த கடிதத்தினடிப்படையில் தான் பள்ளி நிர்வாகத்தை சார்ந்த 5 பேரையும் காவல்துறையினர் கைது செய்திருக்கிறார்கள்.