அமெரிக்காவில் இருக்கக்கூடிய சன் பிரான்சிஸ்கோ நகரில் 42 அடி உயர நிர்வாண பெண்ணினுடைய சிலை திறக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. மேலும் இந்த படைப்பிற்கு ஆர் எவல்யூஷன் என பெயரிடப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
ஆர் எவல்யூசன் என பெயரிடப்பட்டிருக்கக்கூடிய இந்த பெண்ணின் சிலையானது பெண்களுக்கான சுதந்திரம் மற்றும் அதிகாரம், வலிமை போன்றவற்றை பறைசாற்றுவதற்காக வைக்கப்பட்டுள்ளதாகவும் அதிலும் குறிப்பாக சான்பிரான்சிஸ்கோவில் இருக்கக்கூடிய பெர்ரி கட்டிடத்தின் முன்பாக இனி சிலை 6 மாத காலங்களுக்கு வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சிலையினை வடிவமைத்தவர் மார்க்கோ கோக்ரேன் என்பவர் ஆவார்.
இவர் இந்த சிலை குறித்து கூறும் பொழுது, இந்த சிலையானது பெண்களுக்கு ஆன சுதந்திரம் மற்றும் பயமின்றி நடக்கக்கூடிய உலகிற்கான அழைப்பு என தெரிவித்திருக்கிறார். இந்த சிலையானது இதற்கு முன்பாக லாஸ் வேகாஸ் பெட்டுலுமா மற்றும் ஃபர்னிமேன் விழா போன்றவற்றில் கலந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்த சிற்பத்தின் சிறப்பு அம்சங்கள் :-
நாளொன்றுக்கு ஒரு முறை சுவாசிப்பது போன்று தொடர்ந்து 1 மணி நேரம் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் மின் விளக்குகளால் ஜொலிக்கும் என்றும் இதனுடைய மொத்த எடை 32 ஆயிரம் பவுண்டுகள் என்றும் இந்த சிலையில் மொத்தமாக 55,000 வெல்டுகள் இடம் பெற்று இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.