எந்த ஒரு பேருந்து ஓட்டுனரும் செய்யாத வினோத சம்பவத்தை செய்துள்ளார் ஈரோடு தனியார் பேருந்து ஓட்டுநர். இதனால் போக்குவரத்து துறை, காவல்துறை மற்றும் பொது மக்களிடம் இருந்து குவியும் பாராட்டு.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள அந்தியூரை சேர்ந்தவர் பேருந்து ஓட்டுநர் சதீஷ். இவர் அந்தியூரில் உள்ள சென்னம்பட்டி முதல் ஈரோடு வரை இயங்கும் தனியார் பேருந்தில் ஓட்டுனராக பணி புரிகிறார். பொதுவாக தனியார் பேருந்து என்றாலே அதிவேகம், இரைச்சலான ஒலி ஆகியவை நினைவில் வரும் ஆனால் இவர் வினோத செயல் ஒன்றை செய்துள்ளார்.
இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அவர் பேருந்தில் ஹெல்மெட் அணிந்து சென்னம்பட்டி யில் இருந்து ஈரோடு வரை இயக்கியுள்ளார். இதில் வழியில் தலைக்கவசம் அணியாமல் செல்லும் அனைவருக்கும் விழிப்புணர்வு கூறும் விதமாக இச்செயலை செய்துள்ளார்.
இவர் செல்லும் வழியில் செல்லும் அனைவருக்கும் தலைகவசம் நமது உயிர்க்கவசம் அதனால் அதை நாம் இருசக்கர வாகனத்தில் செல்லும் போது கட்டாயம் அணிந்து செல்ல வேண்டும் என்று வலியுறுத்தி சென்றார். இவ்வாறு இவர் செய்த இந்த சம்பவம் அனைவரிடத்திலும் பாராட்டைப் பெற்று வருகிறது.
தலைகவசம் அணிவதன் மூலம் நமக்கு ஏற்படும் கொடிய விபத்தில் இருந்து சிறு காயங்களுடன் நாம் நம்மை பாதுகாக்க முடியும் என்று இவர் செய்த செயல் காவல்துறை மற்றும் பொதுமக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று பாராட்டுகளையும் பெற்று வருகிறார்.