பொதுவாக புத்தாண்டு என்றாலே வாழ்க்கையில் எவ்வளவு சோகம் துக்கம் என இருந்தாலும் நாம் அதை புத்தாண்டில் இருந்து மறந்து அன்று முதல் புதிய வாழ்வை தொடங்க வேண்டும். புதிய நாள் உறுதியோடும் நம்பிக்கையோடும் அன்று முதல் நம்பிக்கை வைத்து தொடங்குவது வழக்கம். ஆனால் இங்கு அன்று வாழ்க்கை முடிந்த ஒரு கோர சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இந்தியாவில் நாம் புத்தாண்டு கொண்டாடியதை தொடர்ந்து அமெரிக்காவில் நேற்று மதியம் புத்தாண்டை கோலாகலமாக கொண்டாடினர். நியூயார்க் நகரில் அனைத்து ஹோட்டல்கள், பப்புகள், பொழுதுபோக்கு இடங்கள் என வண்ண வண்ண விளக்குகள் கொண்டு அலங்கரிக்கப்பட்டு திருவிழா கோலமாக காணப்பட்டது. அனைத்து இடங்களிலும் மக்கள் கூட்டம் அலைமோதியது.அப்போது லூசியானாவில் இருக்கின்ற நியூ ஆர்சியன்ஸ் நகரில் புத்தாண்டு கொண்டாட்டம் நடைபெற்று கொண்டிருந்தது.
அப்போது அங்கு வந்த மர்ம நபர் ஒருவர் புத்தாண்டு கொண்டாடிக் கொண்டிருந்த அந்த மக்கள் இருந்த தெருவில் லாரியை வேகமாக கொண்டு சென்று மோதினார். அதில் ஏற்பட்ட விபத்தில் சம்பவ இடத்தில் ஏராளமான மக்கள் காயமடைந்தனர். மேலும் இதில் 15க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. மேலும் போலீஸ் மற்றும் அந்த லாரியை ஓட்டி வந்த நபர் இடையே வந்த மோதலில் அந்த லாரி ஓட்டி வந்த நபர் சுட்டு கொல்லப்பட்டார். புத்தாண்டுடன் தொடங்கிய இந்த வருடம் அவர்களுக்கு இறுதி ஆண்டாக மாறி அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.