மக்களிடம் பிச்சை எடுத்து வாழும் ஒரு குடும்பம் தங்களது பாட்டியின் நினைவு நாளுக்காக ரூ 1.25 கோடி மதிப்பிலான மிகப்பெரிய விருந்து அளித்து ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த விருந்து நிகழ்வில் 20,000 மேலாக மக்கள் கலந்து கொண்டனர்.இச்சம்பவம் பாகிஸ்தானில் நடந்தேறியுள்ளது.
பொதுவாக யாசகம் கேட்க காரணம் வேலைக்கு செல்ல முடியாமல் குடும்பம் இல்லாமல் இருப்போர் யாசகம் பெற்று தனது ஒரு வேலை சாப்பாட்டுக்காக யாசகம் பெற்று போது சாலைகளில் உறங்கியும் வருவோர்கள் தான் யாசகம் பெறுபவர்கள். தற்போது நடந்துள்ள சம்பவத்தை பார்க்கும்போது ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
பாகிஸ்தானில் உள்ள குஜ்ரன்வாலா பகுதியில் ஒரு குடும்பம் யாசகம் கேட்டு தனது பாட்டியின் நினைவு நாளை கொண்டாடும் விதமாக ரூ 1.25 கோடி மதிப்பில் பிரமாண்ட விருந்து ஒன்றை அளித்துள்ளது. இந்த விருந்துக்கு வரும் மக்களுக்கு வாகனங்கள் ஏற்பாடு செய்துள்ளனர். இந்த விருந்தில் சுமார் 20 ஆயிரம் மக்கள் கலந்து கொண்டனர்.
இந்த விருந்திருக்கு பஞ்சாப் மாகாணத்தில் இருந்து ஏராளமான மக்கள் கலந்து கொண்டனர். இந்த விருந்தில் 250 ஆடுகள் வெட்டு பட்டதாகவும்,மேலும் பாரம்பரிய உணவுகளான சிறி பேய், முராப்பா உள்ளிட்ட இறைச்சிகளும் வழங்கப்பட்டது. இதில் காலை தவிர மதியம்,இரவு இரு வேலை விருந்து வழங்கப்பட்டது. இதனால் நெட்டிசன்கள் பலரும் நாமும் பேசாமல் யாசகம் எடுக்கலாம் என கருத்து தெரிவித்து வருகின்றனர்.