சுடுகாட்டில் கோரி நடத்திய வினோத பூஜை!!! பரபரப்பை ஏற்படுத்திய வீடியோ இணையத்தில் வைரல்!!!

0
171
#image_title

சுடுகாட்டில் கோரி நடத்திய வினோத பூஜை!!! பரபரப்பை ஏற்படுத்திய வீடியோ இணையத்தில் வைரல்!!!

திருச்சி மாவட்டத்தில் இறந்தவரின் சடலத்தின் மீது அமர்ந்து அகோரிகள் நடத்திய வினோத பூஜை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகின்றது.

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள பூவாளூரில் 60 வயது நிரம்பிய பாலசுப்ரமணியன் என்பவர் வசித்து வந்தார். பாலசுப்ரமணியன் அவர்கள் அங்கு உள்ள ஒரு டீ கடையில் டீ மாஸ்டராக உள்ளார். இந்நிலையில் பாலசுப்ரமணியன் அவர்களுக்கு ஏற்பட்ட திடீர் மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக நேற்று(அக்டோபர்9) பாலசுப்ரமணியன் அவர்கள் உயிரிழந்தார்.

பாலசுப்ரமணியன் அவர்களின் உடலுக்கு இறுதி சடங்கு செய்து எரியூட்டுவதற்கு அவருடைய உறவினர்கள் பாலகிருஷ்ணன் அவர்களின் சடலத்தை திருச்சியில் உள்ள ஓயாமரி சுடுகாட்டிற்கு எடுத்து வந்தனர். இதற்கு மத்தியில் இறந்த பாலசுப்ரமணியன் அவர்களின் சடலத்திற்கு அகோரி முறைப்படி ஆன்மா சாந்தி பூஜை செய்ய வேண்டும் என்று அவருடைய உறவினர் சரவணன் அவர்கள் நினைத்தார்.

இதையடுத்து இறந்த பாலசுப்ரமணியன் அவர்களின் உறவினர் சரவணன் திருச்சி அரியமங்கலத்தில் உள்ள கோரி மணிகண்டன் அவர்களிடம் கேட்டுள்ளார். அகோரி மணிகண்டன் அவர்கள் காசியில் அகோரி பயிற்சி பெற்றுள்ளார். இதையடுத்து இறந்த பாலசுப்ரமணியன் அவர்களின் உறவினர் சரவணன் கேட்டுக் கண்டதை அடுத்து உடல் முழுவதும் திருநீர் பூசிக் கொண்டு அகோரி மணிகண்டன் தன் சீடர்களுடன் அவர்கள் பாலசுப்ரமணியன் அவர்களின் உடல் வைத்திருந்த ஓயாமரி சுடுகாட்டுக்கு வந்தனர்.

இதையடுத்து பாலசுப்ரமணியன் அவர்களின் உடலுக்கு உறவினர்கள் அனைவரும் செய்யும் வழக்கமான இறுதிச் சடங்குகளை செய்து முடித்தனர். இதன் பின்னர் அகோரி மணிகண்டன் அவர்கள் பாலசுப்ரமணியன் அவர்களின் உடல் மீது ஏறி அமர்ந்து அகோரி முறைப்படி அகோர மந்திரங்கள் சொல்லி பூஜை செய்யத் தொடங்கினார்.

அந்த சமயம் அகோரி மணிகண்டன் அவர்களுடன் வந்த சக அகோரிகள் டம்ரா மேளம் அடித்து சங்கு ஒலி எழுப்பி ஹரஹர மகாதேவா என்று முழக்கம் இட்டனர். பின்னர். இறந்த பாலசுப்ரமணியன் அவர்களின் உடலுக்கு தீபாராதனை காட்டப்பட்டு அகோரி பூஜை முடிக்கப்பட்டது.

காசியில் நடைபெறும் இந்த அகோரி பூஜை திருச்சி ஓயாமரி சுடுகாட்டில் நடைபெற்ற இந்த சம்பவம் சற்று திகிலூட்டும் விதமாக இருந்தது. மேலும் இந்த வினோத பூஜை அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகின்றது.

Previous articleபிரம்மாண்ட இயக்குநர் திரைப்படத்தில் வில்லியாகும் காஜல் அகர்வால்!!! அதுவும் எந்த நடிகருக்கு என்று தெரியுமா!!?
Next articleமக்களுக்கு ஓர் முக்கிய அறிவிப்பு! நியாய விலை கடைகளில் இனி இந்த முறையில் தான் பொருட்களை வாங்க முடியும் கவனிச்சுக்கோங்க!!