ஆளுநரை அடித்த மர்ம நபர்!

Photo of author

By Parthipan K

ஆளுநரை அடித்த மர்ம நபர்!

Parthipan K

 

பதவியேற்பு விழாவில் பேசிக் கொண்டிருந்த ஆளுநரை மர்ம நபர் ஒருவர் மேடையில் ஏறி கன்னத்தில் பளார் என அறைந்த வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

ஈரானில், கிழக்கு அஜர்பைஜான் மாகாணத்தின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்ட அபிதின் கோரம் பதியேற்பு விழாவில் பேசிக் கொண்டிருந்த போது மர்ம நபர் ஒருவர் திடீரென மேடையில் ஏறி அவரது கன்னத்தில் பளார் என்று அடித்து சண்டையிட ஆரம்பித்தார்.

உடனடியாக அங்கே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த காவலர்கள் அவரை தூக்கி வெளியே கொண்டு சென்றனர்.

விசாரணையின் முடிவில் தாக்குதலில் ஈடுபட்ட நபர் அயுப் அலிசாதே என்பவர் என தெரிய வந்தது.

விசாரணையில் இந்த தாக்குதலுக்கான காரணம் தெரியவில்லை எனினும், அயுப் அலிசாதேவின் மனைவிக்கு ஆண் மருத்துவர் ஒருவர் மருத்துவ சிகிச்சை அளித்ததற்காக அவர் கோபத்தில் இருந்துள்ளார்.

அந்த கோபத்தில் அவர் இவ்வாறு செய்திருக்கலாம் என அங்கே உள்ள உள்ளூர் செய்தி ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஈரானின் அசர்பைஜான் மாகாணத்தில் கவர்னராக அபெதின் கோர்ராம் பதவியேற்ற போது மர்ம நபர் மேடை ஏறி அறைந்த இந்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.