பாரதிகண்ணம்மா சீரியலில் கண்ணம்மா விலகல்.? அதிர்ச்சியில் ரசிகர்கள்.!!

0
281

விஜய் டிவி, சன் டிவி, ஜீ தமிழ், கலர்ஸ் தமிழ் ஆகிய டிவிகளில் பல்வேறு சீரியல் ஒளிபரப்பாகி வருகின்றன. சீரியல்களுக்கும் திரைப்படங்களைப் போன்று தனி ரசிகர் பட்டாளமே இருக்கின்றனர் என்று கூறலாம். தற்போது இல்லத்தரசிகள் முதல் அனைத்து வயதினர் வரை அனைவரும் ரசித்து பார்க்க ஆரம்பித்துவிட்டனர்.

அந்த வகையில் பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் அனைத்தும் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில், விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பாரதி கண்ணம்மா சீரியலுக்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதுவரை டிஆர்பி ரேட்டிங்கில் தொடர்ந்து முன்னிலையில் இருந்து வருகிறது. குறிப்பாக இந்த சீரியலில் கண்ணம்மா கதாபாத்திரத்திற்கு ரசிகர்கள் அதிகம்.

இந்நிலையில் சீரியலில் வெண்பா வுக்கும்-கண்ணம்மா வுக்கும் இடையே நடக்கும் போட்டியே சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது. பாரதிகண்ணம்மா சீரியல் கிட்டத்தட்ட இறுதி கட்டத்தை எட்டியுள்ளது‌. ஹீரோயினாக நடிக்கும் ரோஷினி சீரியலில் இருந்து விலகுவதாக தகவல்கள் வெளியாகி ரசிகர்களை சோகம் அடையச் செய்துள்ளது.

தற்போது தெரியவரும் தகவலின்படி அடுத்த இரண்டு வாரங்கள் மட்டுமே ரோஷினி கண்ணம்மாவாக நடிப்பார் என்றும். அதன்பின், அந்த கதாபாத்திரத்தில் வேறு நடிகை நடிக்க உள்ளதாகவும் சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியாகி வருகிறது. ஆனால், இது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியிடவில்லை என்பதால் உண்மையில் ரோஷினி சீரியலை விட்டு விலகுவாரா.? இல்லையா.? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Previous articleபாஜக மீது முடிந்தால் கை வைத்து பாருங்கள் தமிழக அரசுக்கு -அண்ணாமலை சவால்.!!
Next articleஆளுநரை அடித்த மர்ம நபர்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here