வந்தது ஸ்ட்ரிக்ட் ஆர்டர்.. பயணிகளிடம் இதை கேட்கவே கூடாது!! அரசு நடத்துநர்களுக்கு பறந்த திடீர் உத்தரவு!!  

0
128
A strict order came.. Passengers should never be asked this!! A sudden order to government administrators!!
A strict order came.. Passengers should never be asked this!! A sudden order to government administrators!!

வந்தது ஸ்ட்ரிக்ட் ஆர்டர்.. பயணிகளிடம் இதை கேட்கவே கூடாது!! அரசு நடத்துநர்களுக்கு பறந்த திடீர் உத்தரவு!!

திமுக ஆட்சிக்கு வந்து பெண்களுக்கு கட்டணமில்லா பேருந்து பயணத்தை கொண்டு வந்ததையடுத்து பல்வேறு குற்றச்சாட்டுகள் அடுத்தடுத்து சுமத்தப்பட்டது. அந்த வகையில் பெண்கள் ஏதேனும் பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தால் அவர்களை கண்டு கொள்ளாமல் செல்வது என தொடங்கி பல்வேறு புகார்கள் வந்த வண்ணமாகவே இருந்தது.

போக்குவரத்து கழக ஊழியர்கள் தான் இவ்வாறு நடந்து கொள்கிறார்கள் என்றால் அக்கட்சி அமைச்சரும், ஒரு பொதுக்கூட்டத்தில் ஓசி பஸ்ஸில் செல்கிறீர்கள் என்று கூறியது பெண்களிடையே அதீத கோபத்தை ஏற்படுத்தியது. அச்சமயத்தில் இருந்து போக்குவரத்து கழக பேருந்து ரீதியாக பல புகார்கள் தற்பொழுது வரை பயணிகளிடமிருந்து வந்து கொண்டிருக்கிறது.

அதில் இரண்டாவதாக பெரும்பாலானோர் கூறுவது, நடத்துனர்கள் பயணச்சீட்டு வாங்க சில்லறை வேண்டுமென்று நிர்பந்தனை செய்வதாக கூறுகின்றனர். இது குறித்து தற்பொழுது போக்குவரத்துக் கழகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. பயணிகள் மாநகரப் பேருந்துகளில் பயணம் செய்யும்பொழுது அவர்கள் கொடுக்கும் பணத்தைப் பெற்றுக் கொண்டு உரிய சில்லறையை கொடுக்க வேண்டும்.

இதனைத் தவிர்த்து அவர்களிடம் சில்லறை கேட்டு தொந்தரவு செய்யக்கூடாது. அதுமட்டுமின்றி நடத்துனர்களுக்கு பணியில் இருக்கும் பொழுது கொடுக்கப்படும் முன் பணத்தை பயணச்சீட்டு வாங்குபவர்களிடம் முறையாக கொடுக்க வேண்டும். மேற்கொண்டு பயணிகளிடம் எந்த ஒரு வாக்குவாதத்திலும் ஈடுபடவும் கூடாது.

இவ்வாறு சில்லரைக் கேட்டு கட்டாயப்படுத்தியதாக மேற்கொண்டு யார் மேலாவது புகார் வரும் பட்சத்தில் அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளனர். அதுமட்டுமின்றி அந்தந்த கிளை மேலாளர்கள் நேர்காப்பாளர் என அனைவரும் இதற்கு உண்டான அறிவுரையை அனைத்து நடத்துனர்களிடமும் கூறி எந்த ஒரு புகாரும் வராத வகையில் நடந்து கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.

Previous article‘சுறா படத்தில் எதுக்கு பா நடிச்ச’ எனக்கேட்ட மனோபாலா..குமுறிய விஜய்!
Next articleமலையாள திரையுலகில் நடந்த மேலும் ஒரு சோகம்! பிரபல நடிகை மாரடைப்பால் மரணம் !!