cricket: இந்திய அணி தற்போது விளையாடி வரும் ஆஸ்திரேலியா எதிரான போட்டியில் தடுமாறி வருகிறது.
இந்திய மற்றும் ஆஸ்திரேலியா இடையே இன்று இரண்டாவது நாளாக பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியானது நேற்று மெல்போர்ன் மைதானத்தில் தொடங்கியது. இதில் முதலில் ஆஸ்திரேலிய அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது. இதில் ஆஸ்திரேலிய அணி 474 ரன்கள் குவித்தது.
தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி குறைவான ரன்களில் ரோஹித் 3 ரன்களிலும் கே எல் ராகுல் 24 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். தொடர்ந்து களமிறங்கிய விராட் கோலி மற்றும் ஜெய்ஸ்வால் இடையிலான இணை அணிக்கு வெகுவாக ரன்கள் சேர்த்தது. இதில் ஜெய்ஸ்வால் சிறப்பாக விளையாடி அரைசதம் விளாசி விளையாடி வந்தார். அவர் பீல்டர் அருகில் இருக்கும் போது பீல்டர் கையில் நேராக பந்து சென்றதை கவனிக்காமல் ரன் ஓடினார் இதனால் 82 ரன்களில் ரன் அவுட் ஆனார்.
தொடர்ந்து அதே தவறை மீண்டும் செய்து விராட் கோலி ஆட்டமிழந்தார். தொடர்ந்து களமிறங்கிய ஆகாஷ் தீப் ரன் ஏதும் இல்லாமல் போலண்ட் வீசிய பந்தை லயன் கையில் அடித்து விக்கெட் ஆனார். சற்று நேரத்தில் முக்கிய விக்கெட்டுகளை இழந்துள்ளது இந்திய அணி. இந்திய அணி தற்போது 163 ரன்கள் அடித்து 5 விக்கெட்டுகளை இழந்துள்ளது. இந்திய அணி இந்த தொடரில் மொத்தம் உள்ள 5 போட்டியில் 4 போட்டியில் வெற்றி பெற வேண்டும் ஆனால் ஒரு போட்டி தோல்வி ஒரு போட்டி சமன் என்பதால் நடக்கும் இரு போட்டிகளில் வெற்றி பெற வேண்டும்.