அடுத்த ஆண்டு நடக்க உள்ள ஐ பி எல் 2025 க்கான ஐ பி எல் மெகா ஏலம் கடந்த மாதம் 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் சுத்தி அரேபியாவில் நடைபெற்று முடிந்தது. பொதுவாக ஐ பி எல் போட்டிகளில் எந்த அணி தது அணியின் வீரர்களிடம் மதிப்புடனும், மரியாதையுடனும் நடந்து கொள்கிறதோ அந்த அணி கோப்பையை வெல்கிறது.
அதற்கு ஒரு சிறந்த உதாரணம் csk மற்றும் mi இரு அணிகளும் கோப்பைகளை குவித்துள்ளது. மேலும் சில அணிகள் அணியின் வீரர்களை மதிப்பதில்லை. லக்னோ அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா லக்னோ அணியின் கேப்டன் கே எல் ராகுலை மைதானத்தில் வைத்து பேசியது வைரல் ஆனது. அதனால் அவர் அணியை விட்டு வெளியேறினார்.
இந்நிலையில் ஆகாஷ் சோப்ரா யூடியூப் சேனலில் பேசிய சஞ்சீவ் கோயங்கா கூறுகையில், லக்னோ அணியை பற்றி பேசிய அவர் இந்த முறை நடைபெற்ற மெகா ஏலம் எங்களுக்கு சிறப்பாக அமைந்தது. நாங்கள் அணியின் மிடில் ஆர்டர் வலிமையாக இருக்க வேண்டும் என்று நினைத்தோம். அதுமட்டுமல்லாமல் இந்திய அணியின் பந்து வீச்சாளர்கள் மட்டும் கொண்டு விளையாட வேண்டும் என்று கட்டமைத்துள்ளோம்.
மேலும் கேப்டன் குறித்த கேள்விக்கு நாங்கள் இன்னும் முடிவு செய்யவில்லை. அணியின் ரிஷப் பண்ட்,பூரன்,மார்க்ரம், மிட்செல் மார்ஷ் ஆகியோர் உள்ளனர். அதனால் பிறகு முடிவு செய்யப்படும் என கூறிய பதில் பண்ட் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த முறை ரிஷப் பண்ட்டை லக்னோ அணி ரூ.27 கோடிக்கு வாங்கியது குறிப்பிடத்தக்கது. பண்ட் தான் கேப்டன் என கூறப்பட்ட நிலையில் தற்போது அவர் முடிவு செய்யவில்லை என கூறியது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.