ஈரோடு அரசு கல்லூரியில் படிக்கும் மாணவி தற்கொலை! பரபரப்பு சம்பவம்!

0
191
A student studying in Erode Government College commits suicide! Sensational incident!
A student studying in Erode Government College commits suicide! Sensational incident!

ஈரோடு அரசு கல்லூரியில் படிக்கும் மாணவி தற்கொலை! பரபரப்பு சம்பவம்!

ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை உள்ள நெருஞ்சிப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் லட்சுமணன்.இவர் கூலி வேலை செய்து வருகிறார்.இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.இரண்டாவது மகள் கீர்த்தனா(17).இவர் நம்பியூரில் உள்ள அரசு கலை கல்லூரியில் பி.ஏ முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.இவர் அங்குள்ள விடுதியில் தங்கி படித்து வந்தார்.

இந்நிலையில் கடந்த ஒருவாரமாக கல்லூரிக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்துள்ளார்.நேற்று காலை லட்சுமணன் வழக்கம் போல் வேலைக்கு சென்று விட்டு மதியம் சாப்பிடுவதற்காக வீட்டிற்கு வந்துள்ளார்.அப்போது வீட்டில் இருந்த கீர்த்தனா செல்போனில் பேசிகொண்டிருந்தார்.அதனை கண்ட லட்சுமணன் கீர்த்தனாவை கண்டித்துள்ளார்.அதன்பிறகு மீண்டும் வேலைக்கு செல்லும்பொழுது கீர்த்தனாவிடம் இருந்து செல்போனை லட்சுமணன் வாங்கி சென்றுள்ளார்.

அதனால் கீர்த்தனா மனவேதனையில் இருந்துள்ளார்.அப்போது வீட்டில் யாரும் இல்லாத நிலையில் கீர்த்தனா தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.அதனையடுத்து வேலையை முடித்து வீடிற்கு வந்த போது வீட்டின் கதவு பூட்டப்பட்டிருந்தது.அதனை கண்டு அதிர்ச்சி அடைந்த லட்சுமணன்.கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளார்.அப்போது அங்கு கீர்த்தனா தூக்கிட்ட நிலையில் தொங்கியுள்ளார்.உடனடியாக அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கீர்த்தனாவை மீட்டு அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்தனர்.

அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவரி ஏற்கனவே இறந்துவிட்டதாகவும் தெரிவித்தனர்.மேலும் இந்த சம்பவம் குறித்து அம்மாபேட்டை போலீசார்க்கு தகவல் தெரிவிக்கப்பட்டது அந்த தகவலின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Previous articleகவுந்தப்பாடியில்  கோர விபத்து! தூக்கி வீசப்பட்டு நண்பர்கள் பலி! 
Next articleரயில்களில் அறிமுகம்  படுத்தப்பட்டுள்ள புதிய சாதனம்! ரயில்வே அமைச்சகம் வெளியிட்ட தகவல்!