விடுதியில் குழந்தை பெற்ற மாணவி! முறையாக விசாரணை நடத்தவில்லை என்றால் போராட்டம் நடக்கும்!

0
271
A student who had a baby in the hostel! If there is no proper investigation, there will be a protest!
A student who had a baby in the hostel! If there is no proper investigation, there will be a protest!

விடுதியில் குழந்தை பெற்ற மாணவி! முறையாக விசாரணை நடத்தவில்லை என்றால் போராட்டம் நடக்கும்!

கர்நாடக மாநிலம் சிக்கமகளூரு டவுன் பேளூர் சாலையில் அரசு கல்லூரிக்கு சொந்தமான விடுதி ஒன்று செயல்பட்டு வருகின்றது.அந்த விடுதியில் 200 க்கும் மேற்பட்ட மாணவிகள் தங்கி படித்து வருகின்றனர்.இந்நிலையில் அந்த விடுதியில் தங்கி படித்து வந்த பியூசி இரண்டாம் ஆண்டு படித்து வருகின்றார்.அந்த மாணவி கர்ப்பமாக இருந்துள்ளார்.நிறைமாத கர்ப்பிணியாக இருந்த அவருக்கு விடுதியில் வந்தே வார்டன் பிரசவம் பார்த்துள்ளார்.

இதனை பற்றி அவர் வெளியில் யாரிடமும் சொல்லாமல் சமூக நலத்துறை அதிகரிக்கும் மட்டுமே தெரிவித்துள்ளார்.பிரசவத்திற்கு பிறகு மாணவி மற்றும் குழந்தைக்கும் மருத்துவமனையில் வைத்து சிகிச்சை வழங்கப்படும்.இந்த சம்பவம் தற்போது தெரியவந்துள்ளது.இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்நிலையில் மாணவிக்கு பிரசவம் பார்த்த வார்டன் மற்றும் தகவலை மறைத்த சமூக நலத்துறை அதிகாரி ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மாணவி கர்ப்பம் அடைந்தது எப்படி என்று விசாரிக்கவில்லை என்றும் இதனை யாருக்கும் தெரியாமல் மறைத்து விட்டனர் என இதனால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளனர்.மேலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் போராட்டம் நடக்கும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Previous articleவாரிசு படத்தின் உரிமையையும் கைப்பற்றியது ரெட்ஜெயண்ட் !! ஒரே களத்தில் இறங்கும் தல தளபதி! 
Next articleகுழந்தை காணவில்லை என புகார்.. தாயே விற்பனை செய்தது விசாரணையில் அம்பலம்..!