மின் கட்டணம் கணக்கீடும் முறையில் அடுத்தடுத்து வரும் திருப்பம்! தமிழக அரசு வெளியிட்ட அப்டேட்!
கடந்த 2022 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மின் பயன்பாடு மற்றும் புதிய மின் இணைப்பு வழங்கும் கட்டணங்களை உயர்த்த மின்சார ஒழுங்கு முறை ஆணையம் முடிவு செய்தது.மேலும் அந்த மனுக்கள் குறித்து மக்களிடம் கருத்து கேட்கப்பட்டது. அதனை தொடர்ந்து தமிழகத்தில் மின் கட்டணத்தை உயர்த்த தமிழ்நாடு மின்வாரியம் ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி வழங்கப்பட்டது.அதன் அடிப்படையில் வீடுகளுக்கான மின் கட்டணம் 12 சதவீதம் முதல் 52 சதவீதம் வரை உயர்த்தப்பட்டுள்ளது.
மின் கட்டணம் உயர்ந்தாலும் வீடுகளுக்கு 100 யூனிட் இலவச மின்சாரம் தொடர்ந்து வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.இந்நிலையில் தமிழகம் முழுவதும் மின் இணைப்புடன் வீட்டு உரிமையாளர்கள் அனைவரும் தங்களுடைய ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என தமிழக மின்சாரத்துறை உத்தரவிட்டது.
அரசு வழங்கி வரும் 100 யூனிட் மானியத்தை தொடர்ந்து பெற வேண்டும் என்றால் மின் இணைப்புடன் ஆதார் எண் இணைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.அதனை தொடர்ந்து தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு வீடுகளிலும் இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை மின் கணக்கீடு செய்யப்படுகின்றது.அதற்கு மின் ஊழியர்கள் நுகர்வோரின் வீடுகளுக்கு நேரில் சென்று மீட்டர் ரீடிங் செய்து மின்கட்டணத்தை நிர்ணயம் செய்து அந்த தொகையை மின் அட்டையில் பதிவு செய்வார்கள்.
மேலும் மின் கட்டணம் குறித்து தகவல் அனைத்து மின் இணைப்புடன் இணைக்கப்பட்டுள்ள செல்போன் எண்ணிற்கு எஸ்எம்எஸ் அனுப்பும் முறை நடைமுறையில் உள்ளது.இந்த நடைமுறையில் மாற்றம் செய்யும் விதமாக செல்போன் செயலி மூலம் மின் பயன்பாட்டை கணக்கீடும் முறை அறிமுகம் செய்யப்பட்டது.இதற்கென உருவாக்கப்பட்ட செயலியானது பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது.
இருப்பினும் அதில் பல்வேறு வகையான இடர்பாடுகள் ஏற்பட்டது.இதற்கு தீர்வு காணும் விதமாக 63 லட்சம் செலவில் ஒப்பந்த நிறுவனம் வாயிலாக புதிய செயலி ஒன்று உருவாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.இந்த செயலி மின்வாரிய தகுதியான ஒப்பந்த நிறுவனங்கள் வாயிலாக உருவாக்கப்படும்.இதற்காக பணிகளை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது.