தேர்தல் கமிஷன் வெளியிட்ட திடீர் அறிவிப்பு! இங்கு இடைத்தேர்தல் இல்லை?

Photo of author

By Parthipan K

தேர்தல் கமிஷன் வெளியிட்ட திடீர் அறிவிப்பு! இங்கு இடைத்தேர்தல் இல்லை?

Parthipan K

Updated on:

A sudden announcement by the Election Commission! No by-elections here?

தேர்தல் கமிஷன் வெளியிட்ட திடீர் அறிவிப்பு! இங்கு இடைத்தேர்தல் இல்லை?

லட்சத்தீவு யூனியன் பிரதேசத்தில் உள்ள லட்சத்தீவில் முகமது பைசல் என்பவர்  மக்களவை தொகுதி எம்.பி.யாக இருக்கின்றார். இவர் மீது கொலை முயற்சி வழக்கு ஒன்று நிலுவையில் இருந்தது.கடந்த 2009 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நேரத்தில் முன்னாள் மத்திய மந்திரி பி.எம்.சயீதின் மருமகன் முகமது சாலியை கொலை செய்ய முயன்றதாகவும் முகமது பைசல் உள்பட நான்கு பேர் மீது வழக்கு தொடரப்பட்டது.

மேலும் இந்த வழக்கில் எம்.பி உள்பட நான்கு பேருக்கும் தலா பத்து ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து கடந்த 11 ஆம் தேதி லட்சத்தீவில் கவரட்டியில் உள்ள செசன்சு கோர்ட்டு உத்தரவிட்டது.அவர்களுக்கு தலா 1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டாலோ சம்பந்தப்பட்ட மக்கள் பிரிதிநிதி பதவி இழப்பார்.அப்போது தேர்தல் கமிஷன் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது அந்த அறிவிப்பில் முகமது பைசல்க்கு பத்து ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது அதனால் அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக அறிவித்தது.

அதனால் லட்சத்தீவு தொகுதி காலியாக உள்ளது.அந்த தொகுதிக்கு பிப்ரவரி 27 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என அண்மையில் அறிவிப்பு வெளியானது.இதற்கிடையே தனது தகுதி நீக்கத்தை எதிர்த்து கேரள ஐகோர்ட்டில் முகமது பைசல் மேல்முறையீடு செய்தார்.அதனை விசாரித்த உயர்நீதிமன்றம் முகமது பைசல் மீதான குற்ற நிரூபணத்தையும் சிறைத்தண்டனையும் நிறுத்தி வைக்க உத்தரவிட்டது.

அதன் காரணமாக நேற்று தேர்தல் கமிஷன் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது.அந்த அறிவிப்பில் லட்சத்தீவுக்கான இடைத்தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.மேலும் இது குறித்து தேர்தல் அறிவிக்கை வெளியிடுவதையும் தள்ளி வைப்பதாக கூறியுள்ளது.