அண்ணாமலை நடைப்பயணத்தில் ஏற்பட்ட திடீர் மாற்றம்!! மீண்டும் சென்னைக்கு பயணம்!!
என்னதான் அதிமுகவும், பாஜகவும் ஒரே கூட்டணியாக இருந்தாலும் எடப்பாடி பழனிசாமிக்கும், அண்ணாமலைக்கும் இடையே ஏதேனும் ஒரு வகையில் பகை இருந்து கொண்டுதான் இருக்கிறது.
இது ஒவ்வொரு நாளும் அதிகரித்து தான் செல்கிறது. அண்ணாமலை எதிர்கட்சியான திமுகவை எந்த அளவிற்கு விமர்சனம் செய்து பேசி வருகிறாரோ அதே அளவிற்கு அதிமுக வையும் விமர்சித்து வருகிறார்.
இது போல இவர்களுக்கு இடையில் பகை வளர்ந்துக் கொண்டே சென்றதால் கூட்டணி பிரிந்து விடுமோ என்று அனைவரும் பதட்ட மடைந்தனர். அதனை தடுக்கும் விதமாக எடப்பாடி மற்றும் அண்ணாமலையை மத்திய மந்திரி அமித்ஷா அழைத்து இருவரையும் சமாதானம் செய்து வைத்தார்.
ஆனால் அண்ணாமலை தொடர்ந்து அதிமுகவில் சர்ச்சையை கிளப்பி வருகிறார். இவர் நடைபயணம் மேற்கொள்ளப்பட்ட முதல் நாள் அன்றே அனைவரிடமும் ஓ.பன்னீர்செல்வம் கட்சிக்காக மிகவும் பணியாற்றி உள்ளார்.
பாஜக இவரை ஒருபோதும் தள்ளி வைக்கவில்லை என்று பேசினார். இதற்கு அதிமுக விடமிருந்து கடும் எதிர்ப்பு வந்தது. மேலும், பன்னீர்செல்வம் மற்றும் டி.டி.வி தினகரன் இருவரும் இணைந்து கொடநாடு கொள்ளை வழக்கு குறித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இதனை அண்ணாமலை ஆதரிப்பதாக பேசியது அதிமுக கட்சியை மிகுந்த கோபம் அடைய செய்தது. இதனை கண்டிக்கும் விதமாக ஜெயக்குமார், உதயகுமார் மற்றும் செல்லூர் ராஜு ஆகியோர் விமர்சனம் தெரிவித்தனர்.
இதனால் அதிமுக மற்றும் பாஜக இடையே மீண்டும் உரசல்கள் அதிகமானது. எனவே, அண்ணாமலையின் மீது புகார் தெரிவித்து டெல்லி மேலிடத்திற்கு அதிமுக தரப்பில் இருந்து தவல்கள் எழுப்பப்பட்டது.
எனவே, அண்ணாமலையிடம் டெல்லி மேலிடம் விசாரணை நடத்தியதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் இன்று நடைபெற இருக்கும் அண்ணாமலையின் பாத யாத்திரை நிகழ்ச்சியில் சிறு மாற்றங்கள் செய்து இருப்பதாக கூறப்படுகிறது.
எனவே, இன்று நடக்க இருக்கும் பொதுக்கூட்டம் மற்றும் நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்படும். இதனைத் தொடர்ந்து தற்போது அண்ணாமலை சென்னை சென்றுள்ளார். இது கட்சி வட்டாரங்கள் இடையே திடீர் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.