“ஸ்மார்ட் மீட்டர்” அறிமுகத்தில் திடீர் மாற்றம்!! தமிழக மின்வாரியத்தின் முக்கிய அறிவிப்பு!!
தற்போது மின் மீட்டரில் கரண்ட் பில் கணக்கெடுக்கும் போது ஏமாற்று வேலைகள் நடப்பதாக புகார்கள் எழுந்து வருகிறது. இதைத் தடுப்பதற்காக மின் வாரியம் ஒரு புதிய திட்டமான ஸ்மார்ட் மீட்டர் கொண்டு வரப்படும் என்று அறிவித்திருந்தது.
இதன் மூலமாக கரண்ட் பில்லை குளறுபடிகள் இல்லாமல் கணக்கெடுக்க முடியும். இதனால் மின் ஊழியர்கள் ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று கரன்ட் பில்லை கணக்கெடுக்க தேவை இல்லை.
மேலும், கரண்ட் பில் விவர்ணகள் அனைத்தும் நுகர்வோரின் தொலைப்பேசிக்கு குறுஞ்செய்தி மூலமாக அனுப்பி வைக்கப்படும். மேலும், வீட்டில் மின்சாரம் நிறுத்தப்பட்டால் அதை மின்வாரிய அலுவலகத்தில் இருந்த படியே தெரிந்து கொள்ளலாம்.
எனவே, இந்த ஸ்மார்ட் மீட்டர்கள் அனைத்து வீடுகளிலும் பொருத்தும் பணிகள் விரைவாக மேற்கொள்ளப்ப்டும் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது.
இதற்கான டெண்டர்கள் கடந்த ஜூன் மாதம் துவக்கத்தில் விடப்பட்டது. அதன்படி, மேற்கு மாவட்டங்களில் 1.02 கோடி ஸ்மார்ட் மீட்டர்களும் அதேப்போல தென் மாவட்டங்களில் எண்பது லட்சம் மீட்டர்களும் பொருத்தப்பட உள்ளது.
இந்த டென்டருக்கான இறுதி தேதியானது கடந்த ஐந்தாம் தேதி முதல் மூன்று வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டது. மொத்தம் 19 ஆயிரம் கோடிக்கான இந்த திட்டத்தை வருகின்ற 2025 ஆம் ஆண்டுக்குள் முடிப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அந்த வகையில், தற்போது திடீரென இதற்கான டெண்டர் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. டெண்டருக்கான கூட்டத்தில் நாற்பதுக்கும் அதிகமான நிறுவனங்கள் தங்களது சந்தேகங்களை முன்னிறுத்தி உள்ளனர்.
எனவே, புதிய டெண்டர் துவங்க உள்ளதால் இது தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளது. நிறுவனங்கள் அனைத்தும் ஏராளமான சந்தேகங்களை கேட்டிருப்பதால்,
இதை தீர்த்து மாற்றி அமைக்கப்பட்ட டெண்டர் நடத்துவதற்கு பதிலாக அனைத்து சந்தேகங்களுக்கும் விடையாக ஒரு புதிய டெண்டரை கோரி விடலாம் என்று முடிவு செய்து தமிழக மின்வாரியம் முதலில் கூறி இருந்த டெண்டரை ரத்து செய்துள்ளது.
எனவே, மாற்றி அமைக்கப்பட்ட புதிய டெண்டருக்கான தேதி விரைவில் வெளியாகும் என்று என்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.