இந்தியாவில் திடீரென ஏற்பட்ட நிலநடுக்கம்!! அச்சத்தில் உறைந்த மக்கள்!! 

0
132
A sudden earthquake in India!! People frozen in fear!!
A sudden earthquake in India!! People frozen in fear!!

இந்தியாவில் திடீரென ஏற்பட்ட நிலநடுக்கம்!! அச்சத்தில் உறைந்த மக்கள்!! 

இந்தியாவில் உள்ள அருணாச்சல பிரதேசத்தில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 3.3 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தினால் மக்கள் அச்சத்தில் உறைந்து உள்ளனர்.

கடந்த பிப்ரவரி மாதம் துருக்கி மற்றும் சிரியா நாட்டு எல்லையை ஒட்டிய பகுதிகளில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் மேற்பட்ட மக்கள் உயிரிழந்தனர். ஏராளமானோர் தங்கள் வீடுகளை இழந்து நடுத்தெருவிற்கு வந்து விட்டனர். இந்த சம்பவம் உலகையே உலுக்கியது. ஏராளமான நாடுகள் தங்கள் உதவியை நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதிக்கு அனுப்பி வைத்தனர்.

அதைத் தொடர்ந்து தற்போது பல நாடுகளிலும் நிலநடுக்கம் ஏற்படுவதற்கான சாத்திய கூறுகள் இருப்பதாக விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்தனர். அதைப்போலவே இந்தோனேசியா பிலிப்பைன்ஸ் ஜப்பான் சீனா ஆப்கானிஸ்தான் இந்தியா உட்பட பல நாடுகளில் நிலநடுக்கம் அடிக்கடி ஏற்படுவது தொடர் கதையாகியுள்ளது.

இந்த சூழ்நிலையில் வட கிழக்கு மாநிலங்களில் ஒன்றான அருணாச்சல பிரதேசத்தில் இன்று நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. அளவுகோலில் 3.3 ரிக்டர் அளவில் பதிவான இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் லேசாக குலுங்கின.

நேற்று மணிப்பூர் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் நிலநடுக்கம் ஏற்பட்டதை  தொடர்ந்து இன்று அருணாச்சல பிரதேசத்தில் உணரப்பட்டுள்ளது. இதனால் வடகிழக்கு மாநில மக்கள் மிகுந்த அச்சத்தில் உறைந்து போய் உள்ளனர்.

இன்று காலை சுமார் 6:56 மணி அளவில் அருணாச்சல பிரதேசத்தின் தாவங்கின் கிழக்கு-வடகிழக்கு பகுதியில் சுமார்  64 கிமீ பகுதியில் மையமாக கொண்டு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இருப்பினும் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்த எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை.

முன்னதாக மணிப்பூர் மாநிலத்தில் உள்ள உக்ரூல்  பகுதியில் அதிகாலை 5.01 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிகடர் அளவுகோலில் 3.5 ஆக பதிவானது. அதேபோல ராஜஸ்தான் மாநிலத்தில் ஜெய்ப்பூர் நகரில் அதிகாலை அரைமணி நேரத்தில் அடுத்தடுத்து 3 நிலநடுக்கங்கள் உணரப்பட்டு உள்ளன. இது அந்த பகுதியில் வாழும் மக்களை அச்சமடைய செய்துள்ளது.

Previous articleஇரண்டு மூக்குடன் பிறந்த விசித்திர குழந்தை!! அதிர்ச்சியில் மருத்துவர்கள்!!
Next articleபெண்கள் வன்கொடுமை எதிரொலி!! மெரீனாவில் பலத்த போலீஸ் பாதுகாப்பு!!