திடீரென வெடித்த வெடி! கிணறு தோண்டும் போது ஏற்பட்ட விபரீதம்! 

Photo of author

By Amutha

திடீரென வெடித்த வெடி! கிணறு தோண்டும் போது ஏற்பட்ட விபரீதம்! 

Amutha

திடீரென வெடித்த வெடி! கிணறு தோண்டும் போது ஏற்பட்ட விபரீதம்! 

கிணறு தோண்டும் பணியின் போது திடீரென வெடி விபத்து ஏற்பட்டதால் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.

தென்காசி மாவட்டத்தில் உள்ள ஆலங்குளம் அருகே ராம்நகர் என்ற பகுதி உள்ளது. இங்குள்ள புதுப்பட்டி கிராமத்தில் கிணற்று நீரை வைத்தே பெரும்பாலான விவசாயம் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் அங்குள்ள இடம் ஒன்றில் நேற்று கிணறு தோண்டும் பணி நடைபெற்றது.

இந்த கிணறு தோண்டும் பணியில் ஆனையப்பரத்தைச் சேர்ந்த அரவிந்த் மற்றும் ஆலங்குளத்தைச் சேர்ந்த சாம்சன், ஆசிர் ஆகிய மூன்று பேர் ஈடுபட்டு வந்தனர். இவர்கள் கிணறு தோண்டுவதற்காக வெடிவைத்து அதன் மூலம் பாறைகளை உடைக்க திட்டமிட்டு வெடி தயார் செய்து வைத்துள்ளனர்.

அப்போது கிணறு தோண்டுவதற்காக வைக்கப்பட்டிருந்த வெடி திடீரென வெடித்துள்ளது. திடீரென ஏற்பட்ட எதிர்பாராத விபத்தினால்  அரவிந்த் ஆசிர் மற்றும் சாம்சன் ஆகியோர் வெடி விபத்தில் மாட்டி  உடல் சிதறி உயிர் இழந்தனர்.

இதையடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மூவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த வெடி விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.