பள்ளி பேருந்து திடீர் தீ விபத்து! உள்ளே  சிக்கிய குழந்தைகள்!

Photo of author

By Parthipan K

பள்ளி பேருந்து திடீர் தீ விபத்து! உள்ளே  சிக்கிய குழந்தைகள்!

Parthipan K

A sudden fire accident in a school bus! Children trapped in the bus!

பள்ளி பேருந்து திடீர் தீ விபத்து! உள்ளே  சிக்கிய குழந்தைகள்!

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே தனியார் மெட்ரிக் பள்ளி ஒன்று செயல்பட்டுவருகிறது. அந்த பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகளை வீட்டிலிருந்து பள்ளிக்கு அழைத்து வர பள்ளி வாகனம் செயல்படுகிறது. இன்று காலை சேந்தமங்கலம் பகுதியில் இருந்து ஐந்து மாணவ மாணவிகளை ஏற்றிக்கொண்டு பள்ளி பேருந்து சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்தானது சேந்தமங்கலம் ரயில்வே கேட் அருகே சென்ற போது எதிர்பாராதவிதமாக தீப்பிடித்து எரியத் தொடங்கியது.அதனை கண்ட பேருந்து ஓட்டுனர் கவனித்து உடனடியாக விரைந்த பேருந்தில் இருந்த 5 மாணவ மாணவிகளையும் இறக்கியதால் உயிர்சேதம் எதுவுமின்றி தப்பித்தனர்.