திமுகவின் முக்கிய அமைச்சருக்கு கொரோனா தொற்று! அதிர்ச்சியில் முதலமைச்சர்!

0
70

கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் இந்தியாவில் நோய் தொற்று பரவல் அதிகரித்து வந்தது. இதனை கட்டுப்படுத்துவதற்கு மத்திய, மாநில, அரசுகள் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தனர்.

அதாவது சமூக இடைவெளி, அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும், உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதை தொடர்ந்து நோய் தொற்று பரவல் மெல்ல, மெல்ல, குறைய தொடங்கியது. இதனால் பொதுமக்கள் நிம்மதியடைய தொடங்கினார்கள்.

இந்த நிலையில் தற்போது மீண்டும் இந்த நோய் தொற்று பரவல் குறைந்து வருவதால் பொதுமக்கள் நிம்மதியடைந்திருக்கிறார்கள்.

இந்த நிலையில், ஈரோடு தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், தமிழக வீட்டு வசதித்துறை அமைச்சருமான, முத்துசாமிக்கு நோய் தொற்று பரவல் உறுதி செய்யப்பட்டிருக்கின்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

தமிழ்நாட்டில் தொடக்கத்தில் அதிகரித்து வந்த இந்த நோய் தொற்று பரவல் கடந்த சில தினங்களாக மெல்ல, மெல்ல, குறைந்து வருவது பொதுமக்களுக்கு நிம்மதியளிக்கும் விஷயமாக இருந்து வருகிறது.

ஆனால் தமிழக வீட்டு வசதி துறை அமைச்சர் முத்துசாமிக்கு கடந்த 2 நாட்களாக லேசான காய்ச்சல், இருமல், சளி, உள்ளிட்ட அறிகுறிகள் தென்பட்டனர். ஆகவே அவர் சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் நோய் தொற்று பரிசோதனை செய்து கொண்டார்.

அந்த பரிசோதனையின் முடிவில் அமைச்சர் முத்துசாமிக்கு நோய் தொற்று பரவல் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து மருத்துவர்கள் அறிவுரையினடிப்படையில் அவர் தன்னுடைய இல்லத்திலேயே தன்னை தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

அமைச்சருக்கு நோய்த்தொற்றுப் பரவல் ஏற்பட்டிருப்பது. முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் அவருடைய ஆதரவாளர்களிடையே பெரும் அதிர்ச்சியை உண்டாக்கியிருக்கிறது.