சுவிட்சர்லாந்தில் எளிமையாக உயிரை மாய்த்துக் கொள்ள உதவும் தற்கொலை இயந்திரம்!!

Photo of author

By Gayathri

சுவிட்சர்லாந்தில் எளிமையாகவே தங்கள் உயிரை தாங்களே மாய்த்துக் கொள்ளும் வகையில் இயந்திரம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த இயந்திரத்தில் பெண் ஒருவர் தன் உயிரை மாய்த்துக்கொண்டது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தி லாஸ்ட் ரெசார்ட் என்னும் நிறுவனம் நீண்ட காலமாக கொடிய நோய்களால் பாதிக்கப்பட்டு இருக்கும் நோயாளிகளுக்காக இந்த இயந்திரத்தை கண்டுபிடித்ததாகவும், மேலும் இதில் அவர்கள் தாங்களாகவே தங்களுடைய உயிரை மாய்த்துக் கொள்ள முடியும் என்றும் தெரிவிக்கின்றனர். இந்த இயந்திரத்திற்கு சார்க்கோ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

செப்டம்பர் மாதம் 23ஆம் தேதி ஸ்விட்சர்லாந்தில் உள்ள ஒரு மாகாணத்தில் 64 வயது மதிப்புடைய அமெரிக்க பெண் ஒருவர் இந்த இயந்திரத்தை பயன்படுத்தி தன்னுடைய உயிரை மாய்த்துக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் இறந்தது குறித்து பல அதிர்ச்சியூட்டும் தகவல்கள் இன்றளவும் வெளிவந்து கொண்டிருப்பது மக்களை பயத்தில் ஆழ்த்தியுள்ளது.

இந்த இயந்திரத்தில் முதன் முதலில் இவரை உயர் துறந்தவர் ஆவார். இந்நிறுவனம் சார்க்கோ இயந்திரத்தை பற்றி கூறும் பொழுது இந்த இயந்திரத்தில் படுத்து கதவை மூடிய பின் ஒரு பட்டனை அழுத்தினால் போதும் நைட்ரஜன் வாயு வெளியாகி அமைதியாக தூக்கத்திலேயே உயிரை எடுத்து விடும் என்று கூறியிருக்கிறது.

ஆனால் இந்த பெண்மணிக்கு நடந்தது அப்படி அல்ல என்று நெதர்லாந்து நாட்டை ஊடகம் ஒன்று வீடியோ வெளியிட்டு இருக்கிறது. அந்தப் பெண் இந்த இயந்திரத்திற்குள் படுத்துக்கொண்டு பட்டனை அழுத்தியவுடன் 1 நிமிடம் 57 வினாடிகளுக்கு அந்த இயந்திரத்தில் பொருத்தப்பட்டிருந்த கேமரா துவங்கி உள்ளது. அதில் அந்தப் பெண் துடிதுடித்து இருக்கும் வீடியோ காட்சிகள் பதிவாகி இருக்கிறது என்றும் தகவலை பகிர்ந்திருக்கின்றனர்.

மேலும் இதைப்பற்றி கூறுகையில், 3.50 மணிக்கு அந்த பெண் இயந்திரத்திற்குள் சென்றுள்ளார் என்றும் சுமார் 6 நிமிடங்களுக்குப் பிறகு அதாவது 4 மணியளவில் அந்த இயந்திரத்தை கண்காணிப்பதற்காக அதனை உருவாக்கியவர் செல்லும் பொழுது அவருடைய ஐபேடில் எச்சரிக்கை ஒலி ஒளித்துள்ளது.

இந்த இயந்திரத்தை உருவாக்கியவர் எதற்காக இந்த எச்சரிக்கை ஒலி உருவாகியது என்று புரியாமல் குழம்பிப் போயிருக்கிறார். ஆகவே எளிதாக உயிரை மாய்த்துக் கொள்ள உதவும் இயந்திரம் என விளம்பரம் செய்யப்பட்டது பொய்யானது. மேலும் அந்த வயதான பெண் 30 நிமிடங்கள் நரக வேதனையை அனுபவித்து உயிரிழந்திருக்க கூடும் என்ற தகவலும் வெளியாகி மக்களை அதிர்ச்சி கொள்ளாக்கி இருக்கிறது.