மது,புகைப்பழக்கம் உடல் நலத்திற்கு கேடு என்று தெரிந்தும் பலர் அதற்கு அடிமையாகி கிடக்கின்றனர்.இன்றைய இளைய தலைமுறை புகைப்பழக்கத்தால் வாழ்க்கையை வீணாக்கி வருகிறது.
சிகிரெட் புகைப்பதால் நுரையீரல் புற்றுநோய்,சுவாசப் பிரச்சனை,கல்லீரல் பாதிப்பு,வாய் புற்றுநோய் போன்ற பாதிப்புகள் ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்பட வாய்ப்பிருக்கிறது.அதேபோல் புகைப்பழக்கம் பித்தம் வாதம்,கபம்,மன உளைச்சல் போன்றவற்றை ஏற்படுத்தக் கூடும்.நுரையீரல் தொடர்பான புற்றுநோய் பெரும்பாலும் புகைப்பதால் தான் ஏற்படுகிறது என்று ஆய்வுகள் தெரிவிக்கிறது.
இந்த புகைப்பழத்தை விடுவது மிகவும் சவாலான விஷயம் என்றாலும் தங்களது தன்னம்பிக்கையால் அந்த பழக்கத்தில் இருந்து எளிதில் மீண்டுவிட முடியும்.புகைப்பழத்தை கைவிட ஆயுர்வேத முறைகள் மருந்து மற்றும் மாத்திரைகள் இருப்பினும் சிலருக்கு அதில் இருந்து மீள சற்று கடுமையாக இருக்கிறது.சிலரால் என்ன முயற்சி செய்தும் புகைப்பழக்கத்தில் இருந்து மீள முடியாமல் போய்விடுகிறது.
இந்நிலையில் புகைப்பழகத்தில் இருந்து மீள புதிய செயலி ஒன்று அறிமுகப்படுத்தபட்டு இருக்கிறது.இந்த செயலின் பெயர் “quitbot” ஆகும்.இந்த செயலி மூலம் வெறும் 42 தினங்களில் புகைப்பழக்கத்தில் இருந்து மீள முடியும்.AI உதவியுடன் செயல்படும் இந்த செயலி உங்களை புகைப்பழக்கத்தில் இருந்து நிச்சயம் மீட்டுக் கொண்டு வரும்.
இந்த செயலியில் உள்ள செயற்கை நுண்ணறிவு குரல் புகைப்பழக்கத்தில் இருந்து மீளுவதற்கான அறிவுரைகள் வழங்குவதோடு தங்களை உற்சாகப்படுத்துகிறது.நீண்ட நாட்களாக புகைப்பழக்கத்தில் இருந்து மீள முடியாமல் தவிப்பவர்களுக்கு இந்த செயலி பயனுள்ளதாக இருக்கும்.தற்பொழுது இந்த செயலி ஆங்கிலத்தில் உரையாடும் வகையில் உருவாக்கப்பட்டிருக்கிறது.செயலியின் வரவேற்பை பொறுத்து கூடிய விரைவில் தமிழ் உரையாடல் அம்சம் வரலாம்.