தரை துடைக்க செலவே இல்லாத சூப்பர் ஐடியா? கண் திருஷ்டி முற்றிலும் நீங்கும்!
முதலில் உங்க வீட்டில் அளவுக்கு ஏற்றபடி ஒரு பக்கெட்டில் தண்ணீர் எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த தண்ணீரில்
முதலாவதாக 2 ஸ்பூன் கல் உப்பு இந்தக் கல் உப்பு நாம் தரையை துடைக்கும் போது தரைகளில் கண்ணுக்கு தெரியாத ஈ ,எறும்பு ,பூச்சி போன்றவைகள் இருக்கும். இந்த கல்லுப்பை தண்ணீரில் போட்டு நன்கு கரைத்துக் கொள்ள வேண்டும். இந்தக் கல்லுப்பு ஒரு கிருமி நாசினியாக உள்ளது.
இரண்டாவதாக கற்பூரம் அனைவருடைய வீட்டிலேயும் இந்த கற்பூரமானது இருக்கும். இதுவும் ஒரு கிருமி நாசினி என கூறப்படுகிறது. அது மட்டுமல்லாமல் நல்ல நறுமணத்தையும் தரக்கூடியது.
மூன்றாவதாக மஞ்சத்தூள் ஒரு ஸ்பூன் மஞ்சத்தூளை தண்ணீரில் போட்டு நன்கு கலந்து கொள்ள வேண்டும். இதனை பயன்படுத்தும் போது தரையில் உள்ள கெட்ட பாக்டீரியா, வைரஸ் போன்றவைகள் அழிந்துவிடும். மேலும் இரண்டு
கொத்து வேப்ப இலைகளை உருவி அந்த தண்ணீரில் போட்டுக் கொள்ள வேண்டும். வேப்பிலைகளிலும் ஆண்டிபயாட்டிக், ஆன்டி செப்டிக் இவைகள் உள்ளன.
மேலும் அந்த தண்ணீரில் வாசனைக்காக ஜவ்வாது மற்றும் வாசனை திரவியத்தை பயன்படுத்திக் தரையை துடைக்கும் போது நல்ல வாசனையாக இருக்கும்.
இதனை பயன்படுத்தி தரையைத் துடைக்கும் போது எந்தவித செலவும் இல்லை. அது மட்டும் இன்றி இயற்கை முறை என கூறப்படுகிறது.மேலும் எந்தவித கண் திருஷ்டி இருந்தாலும் இதனை பயன்படுத்தி தரையை துடைக்கும் போது கண் திருஷ்டி நீங்கும்.