ஆசிரியர்களுக்கு ஒரு சூப்பர் நியூஸ்! கல்வி துறை அமைச்சகம் வெளியிட தகவல்!

0
140
A super news for teachers! Information to be published by the Ministry of Education!
A super news for teachers! Information to be published by the Ministry of Education!

ஆசிரியர்களுக்கு ஒரு சூப்பர் நியூஸ்! கல்வி துறை அமைச்சகம் வெளியிட தகவல்!

பள்ளிக்கல்வித்துறை ஆணையர் நந்தகுமார் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார் அந்த கடிதத்தில் பள்ளிக் கல்வித் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வரும் அனைத்து  அரசு, மற்றும்  நகராட்சி உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள 13,331 பணியிடங்களை  நிரப்ப உத்தரவிட்டுள்ளார்.மேலும் அரசு நடுநிலை பள்ளி மற்றும் அரசு மேல்நிலைபள்ளிகளில்  10,11 மற்றும் 12-ம் வகுப்புகளில் படிக்கும் மாணவர்கள் 2023 மார்ச் மாதம் நடைபெற உள்ள அரசு பொதுத் தேர்வை எழுதி நல்ல மதிப்பெண் பெற வேண்டும்.

அந்த மாணவர்களின் அவர்களின் நலனை கருத்தில் கொண்டு பொதுத்தேர்வுக்கு முழுமையாக தயார் செய் உதவும் வகையிலும் அரசு மேல்நிலை மற்றும் உயர்நிலைப் பள்ளிகளில் மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தைக் கருத்தில் கொண்டு பட்டதாரி மற்றும்  முதுகலை பட்டதாரி ஆசிரியர்களின்  காலி பணியிடங்களுக்கு உடனடியாக மாற்று ஏற்பாடு செய்யவேண்டும் என்று எண்ணியது.அது போன்று ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிகளில் ஒன்று முதல் மூன்றாம் வகுப்பு வரை எண்ணும் எழுத்தும் எனும் புதிய  திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்த வேண்டும் என்றும் பள்ளிகல்வித்துறை ஆணையர் கூறினார். மேலும்  இடைநிலை ஆசிரியர்கள் காலி பணியிடங்களை நிரப்பிடவும் மாற்று ஏற்பாடு செய்ய வேண்டியுள்ளது என்று தெரிவித்தார்.

தொடக்கக் கல்வித் துறை மற்றும் பள்ளிக் கல்வித்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு ஆசிரியர் தேர்வு வாரியத்திடம் கோரிக்கையை வைத்துள்ளனர் எனவும் கூறினார்  மேலும் பதவி உயர்வு வழங்குவதற்கும் நடவடிக்கையையும் ஆசிரியர்கள் இல்லாத பள்ளிகளில்  காலிப்பணியிடம் நிரப்ப சிறிது காலமாகும் எனவும் கூறினார். தற்போது நடந்து முடிந்த பொது தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்கள் மிண்டும் மறுத்தேர்வு எழுத உள்ளனர் அந்த மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு ஆசிரியர் காலிப் பணியிடங்களில் பள்ளி மேலாண்மை குழு மூலம் தற்காலிகமாக  பணி செய்ய  ஜூலை 1-ம் தேதி முதல் ஆசிரியர் பணிக்கு தகுதி பெற்ற நபர்களின் விவரங்களை சேகரித்து அவர்களின் தகுதியின்  அடிப்படையில் பதவி வழங்க மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது எனவும் கூறியிருந்தார்.

ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மற்றும்  நடுநிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள 4,989 இடைநிலை ஆசிரியர்கள், மற்றும் அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள 5,154 பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடங்களை அவர்களின் தகுதி வைத்து  ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு செய்யப்படும் எனவும், அதுவரை  ஜூலை 2022 முதல் ஏப்ரல் 2023 வரை 10 மாதங்களுக்கும், அரசு மேல்நிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள 3188 முதுகலை ஆசிரியர் பணியிடங்களை ஜூலை 2022 முதல் பிப்ரவரி 2023 வரை எட்டு மாதங்களுக்கு மட்டும் தற்காலிகமாக பணிப்புரியலாம் எனவும்  பள்ளி மேலாண்மை குழுவின் மூலம் அந்தந்த  பள்ளி அமைந்துள்ள ஊரில் மற்றும் அருகாமையில் உள்ள பகுதியிலுள்ள தகுதியுள்ள நபர்களை சம்பந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியர் தலைமையில் குழு அமைத்து தற்காலிகமாக நிரப்பிக்கொள்ளுவதற்கு அனுமதிக்கப்படுகிறது. அவ்வாறு தேர்வு செய்யப்படும் பொழுது இது முற்றிலும் தற்காலிகமானது என்பதை ,நியமனம் செய்யப்படும் நபர்களுக்கு தெரிவிக்கப்பட வேண்டும் என்றும் கூறியிருந்தார்.

மாத மதிப்பூதியம் தற்காலிகமாக பள்ளி மேலாண்மை குழுவின் மூலம் நியமனம் செய்யப்படும் எனவும்  இடைநிலை ஆசிரியர்களுக்கு மாதம் 7,500 ஆம் ரூபாயும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு மாதம் 10,000 ஆம்  ரூபாயும் முதுகலை ஆசிரியர்களுக்கு மாதம் 12,000 ஆம் ரூபாய் மதிப்பூதியமாக வழங்கப்படும்.அந்தந்த ஆசிரியர் பணிக்கு தகுதியான நபர்களை மட்டும் பள்ளி மேலாண்மை குழுவின் மூலம் தேர்ந்து எடுத்து  நிறைவேற்றிக் கொள்ள வேண்டும்.எனவும் கூறினார். சம்பந்தப்பட்ட பாடத்திற்கு தகுதியான நபர்களை மட்டுமே குழுவின் மூலம் எந்தவித புகார்களும் எழும்பாத வகையில் தேர்வு செய்து நிரப்பிக் கொள்ள வேண்டும் எனவும்  அந்த கடிதத்தில் தெரிவித்தார்.

Previous articleஇந்த மாவட்டத்தில் அதிகரிக்கும் தொற்று பாதிப்பு! கண்டிஷன் போடும் மாவட்ட ஆட்சியர்!
Next articleஒரு குழந்தை இத்தனை லட்சமா? மதுரையில் தொடர்ந்து அரங்கேறும் அதிர்ச்சி சம்பவம்!