பலருக்கு தங்களுடைய சேமிப்பு திட்டங்கள் பாதுகாப்பு திட்டங்கள் போன்றவற்றை தேர்வு செய்வதில் குழப்பங்கள் ஏற்படும். காரணம் தற்பொழுது பல முதலீடுகள் மற்றும் அவசர கால தேவைகளுக்கான திட்டங்கள் என உருவாக்கப்பட்டிருக்கிறது. ஆனால் இவற்றில் நமக்கு தேவையான பாதுகாப்பு மற்றும் முதலீட்டு திட்டத்தை தேர்ந்தெடுக்கும் பொழுது குறிப்பிட்ட கவனத்தை செலுத்துவது அவசியம்.
நம் வாழ்வில் நமக்கு உடல்நிலை சரி இல்லாத பொழுது தேவை என்பது அதிகரிக்கிறது. அதுபோன்று நேரங்களில் நமக்கு மருத்துவ செலவுகளை ஈடு செய்யவும் வயதான காலத்தில் நம்முடைய தேவைகளை பூர்த்தி செய்யவும் சரியான திட்டங்களை தேர்ந்தெடுத்து முதலீடு செய்வது அவசியம். அப்படித்தான் இன்று எல்ஐசி ஜீவன் ஷிரோமணி என்ற உயர் நிகர மதிப்புள்ள திட்டம் குறித்த பார்க்கப் போகிறோம்.
LIC ஜீவன் ஷிரோமணி துக்கத்தின் முக்கிய அம்சங்கள் :-
✓ குறைந்தபட்ச அடிப்படைத் தொகை – 1 கோடி ரூபாய்
✓ காப்பீட்டு காலங்கள் – 14,16,18,20 ஆண்டுகள்
✓ ப்ரீமியம் செலுத்தும் காலம் – 4 ஆண்டுகள்
✓ ப்ரீமியம் செலுத்தும் முறை – மாதம், காலாண்டு, அரையாண்டு, ஆண்டு
✓ முதிர்வு வயது – 69
காப்பீட்டு காலத்தில் சாப்பிட்டாளர்கள் இறக்க நேர்ந்தால் காப்பீட்டில் குறிப்பிடப்பட்டவருக்கு 125% வரை அடிப்படைத் தொகை அல்லது வருடாந்திர பிரீமியம் × 7 என்ற முறைப்படி இதில் எது அதிகமோ அதற்கான தொகை வழங்கப்படும்.
குறிப்பிட்ட வருடங்களின் அடிப்படையில் தொகையின் ஒரு பகுதியானது காப்பீட்டு நபர் உயிருடன் இருக்கும் பொழுது வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி,
✓ 14 ஆண்டு திட்டம் என்றால் 10 வது மற்றும் 12 வது ஆண்டுகளில் 30% தொகை வழங்கப்படுகிறது
✓ 16 ஆண்டு திட்டம் என்றால் 12வது மற்றும் 14வது ஆண்டுகளில் 35 சதவீதம் வழங்கப்படுகிறது.
✓ 18 ஆண்டு திட்டம் என்றால் 14வது மற்றும் 16வது ஆண்டுகளில் 40 சதவீதம் வழங்கப்படுகிறது.
✓ 20 ஆண்டு திட்டம் என்றால் 16வது மற்றும் 18வது ஆண்டுகளில் 45% தொகை வழங்கப்படுகிறது.
இவ்வாறு வழங்கப்படக்கூடிய தொகையின் முதுர்கானது முழுவதுமாக கிடைக்கும் காலகட்டத்தில் காப்பீட்டாளர் உயிருடன் இருந்தால் அடிப்படைத் தொகையோடு உறுதியான சேர்க்கைகள் மற்றும் லாயல்டி சேர்க்கைகளும் இணைந்து வழங்கப்படும். ஒருவேளை காப்பீடாலருக்கு கேன்சர் இதய நோய் சிறுநீரகத் தோல்வி போன்ற காப்பீட்டில் குறிப்பிடப்பட்ட 15 நோய்களுக்கு காப்பீட்டுத் தொகையும் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.