அமெரிக்காவில் நடைபெற்று முடிந்த அதிபர் தேர்தலில் கமலா ஹாரிஸை தோற்கடித்து குடியரசு கடி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றார். இதனை தொடர்ந்து இவர் வருகை ஜனவரி மாதம் அதிபராக பதவியேற்க உள்ளார். மேலும் இவர் இப்போது அமைக்க வேண்டிய நிர்வாகிகள் பட்டியலை தயார் செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் தற்போது ஒரு முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளார், அதில் எலான் மஸ்க் மற்றும் தமிழ் பேசும் இந்திய வம்சாவளியான விவேக் ராமசாமி இருவரையும் அமெரிக்காவின் செயல்திறன் துறையின் தலைவர்களாக அறிவித்துள்ளார். இந்த செயல்திறன் துறை தான் பொருளாதாரம் மற்றும் நிதி மேலாண்மை பணிகளை மேற்கொள்ளும்.
இதில் எலான் மஸ்க் பற்றி தெரிந்திருக்கும் அவர் உலகின் நம்பர் 1 பணக்காரர் மற்றும் டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி என்பதும் தெரிந்த ஒன்றுதான். ஆனால் இதில் விவேக் ராமசாமி பற்றி தெரிய வாய்ப்பு குறைவுதான்.
இவர் பெற்றோர்கள் கேரளாவை சேர்ந்த தமிழ் பேசும் பிராமணர்கள் . அவர்கள் அமெரிக்காவில் ஓஹியோவின் சின்சினாட்டி சிடியில் குடியேறினர் இங்குதான் விவேக் ராமசாமி பிறந்தார்.மேலும் இவர் அதே சிடியில் பயோ டெக் நிறுவனத்தை நடத்தி வருகிறார். இவர் குடியரசு கட்சியில் செயல்பட்டு தேர்தலில் அதிக ஆர்வம் காட்டி வந்தார். தேர்தலில் போட்டியிட இருந்த நிலையில் டிரம்ப் காக போட்டியில் இருந்து வெளியேறினார். பிறகு டிரம்ப் காக கடினமாக உழைத்தார். அதன் காரணமாக அவருக்கு பதவி வழங்கப்பட்டுள்ளது.