பெண்களே இல்லாத பன்றிக்கு நன்றி சொல்லி: தமிழ் சினிமாவில் புது முயற்சி !

Photo of author

By Parthipan K

பெண்களே இல்லாத பன்றிக்கு நன்றி சொல்லி: தமிழ் சினிமாவில் புது முயற்சி !

Parthipan K

பெண்களே இல்லாத பன்றிக்கு நன்றி சொல்லி: தமிழ் சினிமாவில் புது முயற்சி !

விரைவில் வெளியாக இருக்கும் பன்றிக்கு நன்றி சொல்லி என்ற திரைப்படத்தில் ஒரே ஒரு பெண் கூட நடிக்கவில்லை என அதன் இயக்குனர் பாலா அரண் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் இணையத்தில் வெளியான பன்றிக்கு நன்றி சொல்லி என்ற திரைப்படம் தமிழ் சினிமா ரசிகர்களிடையே கவனம் ஈர்த்தது. காரணம் அந்த டிரைலர் காட்டிய நகைச்சுவை கதாபாத்திரங்களும் கதைக்களனுமே. குறும்படங்கள் இயக்கிய பாலா அரண் இயக்கி இருக்கும் இந்த படத்தில் நிஷாந்த், விஜய் சத்யா, நக்கலைட்ஸ் செல்லா, வியன் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு விக்னேஷ் செல்வராஜ் ஒளிப்பதிவு செய்ய சுரேன் விகாஷ் இசையமைத்துள்ளார்.

விரைவில் திரைக்கு வரவுள்ள இந்த படத்தில் ஒரே ஒரு பெண் கதாபாத்திரம் கூட இல்லை என இயக்குனர் பாலா அரண் தெரிவித்துள்ளார். அதுகுறித்து கேட்டபோது ‘கி பி 10ம் நூற்றாண்டில் மகாபலிபுரம் வரும் சீன் துறவி ஒருவரிடம் பன்றி சிலை ஒன்று இருக்கிறது. அது எதிர்பாராத விதமாக காணாமல் போகவே அதை அவர் தேடிக் கண்டுபிடிப்பதே கதை. அதனால் இந்த படத்தில் பெண் கதாபாத்திரங்கள் தேவைப்படவில்லை.’ எனக் கூறியுள்ளார்.

இதுமாதிரி பெண்களே இல்லாமல் தமிழ் படம் ஒன்று வருவது இதுவே முதல்முறை. உலக அளவில் இதுபோல் சில படங்கள் வெளியாகியுள்ளன என்று சொல்லப்படுகிறது. விரைவில் வெளியாக உள்ள் இந்த திரைப்படம் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது