நாளை இரண்டு மாவட்டங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை: அதிரடி அறிவிப்பு

0
209

தமிழகத்தில் அவ்வப்போது உள்ளூர் திருவிழாக்கள் நடக்கும்போது அந்தந்த மாவட்டங்களுக்கு மட்டும் உள்ளூர் விடுமுறை அறிவிப்பது வழக்கமாக இருந்து வருகிறது. அந்த வகையில் தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் புகழ் பெற்று விளங்கும் அய்யா வைகுண்டசாமி அவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு நாளை இந்த இரு மாவட்டங்களிலும் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது

நாளை மார்ச் 3ஆம் தேதி அய்யா வைகுண்டசாமி அவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை என அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர். இதனையடுத்து இந்த இரு மாவட்டங்களிலும் உள்ள பள்ளி கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு நாளை விடுமுறை என்பது குறிப்பிடத்தக்கது

இருப்பினும் இந்த விடுமுறையை ஈடுகட்டும் வகையில் தூத்துக்குடி மாவட்டத்திற்கு வருகிற மார்ச் 14ம் தேதி பள்ளி, கல்லூரி, அரசு அலுவலகங்கள் செயல்படும் என்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.

அதேபோல் நாளைய விடுமுறையை ஈடுகட்டும் வகையில் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு மார்ச் 25ம் தேதி வேலை நாள் என கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் மு.வடநேரே அவர்கள் அறிவித்துள்ளார்

Previous articleபெண்களே இல்லாத பன்றிக்கு நன்றி சொல்லி: தமிழ் சினிமாவில் புது முயற்சி !
Next articleதமிழக முதல்வரை கிண்டல் செய்த ரஜினி-கமல் பட நாயகி!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here