ஒரு டீஸ்பூன் சோம்பு போதும்! உடம்பில் உள்ள இந்த பிரச்சனைகள் அனைத்தும் குணமாகும்!
சோம்பில் உள்ள மருத்துவ குணங்கள் மற்றும் அதிலிருந்து நமக்கு கிடைக்கக்கூடிய நன்மைகள் என்னவென்று இந்த பதிவின் மூலமாக தெரிந்து கொள்ளலாம்.
தற்போது உள்ள காலகட்டத்தில் நம் பலதரப்பட்ட உணவுகளை எடுத்துக் கொள்கிறோம். இதன் விளைவாக செரிமானப் பிரச்சனைகள் மற்றும் உடல் ரீதியான பிரச்சனைகள் ஏற்படுகிறது.
உணவு எடுத்துக் கொண்டதற்குப் பிறகு சிறிதளவு சோம்பினை வாயில் போட்டு மெல்லுவதன் மூலமாக எந்தவித உணவாக இருந்தாலும் அதனை எளிதில் செரிக்கும் தன்மையை கொண்டுள்ளது. சோம்பில் உள்ள மருத்துவ குணங்கள் ஏராளமாக உள்ளது. இதனை நாம் சரியான முறையில் உபயோகிப்பதன் மூலமாக நமக்கு பல நன்மைகள் ஏற்படும். அதனை எவ்வாறு உபயோகப்படுத்தலாம் என்பதை இந்த பதிவு மூலமாக தெரிந்து கொள்ளலாம்.
சிறிய அளவுள்ள பாத்திரத்தில் அரை லிட்டர் தண்ணீர் ஊற்றி அதில் இரண்டு ஸ்பூன் சோம்பு சேர்த்து நன்றாக கொதிக்க வைத்து அதனை வடிகட்டி தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடிப்பதன் மூலமாக நம் உடலில் உள்ள கெட்ட கழிவுகள் மற்றும் செரிமான பிரச்சனைகள், வாயு தொல்லையில் அனைத்தும் நீங்குவதற்கு மிகவும் உதவுகிறது.
குளிர்காலம் மற்றும் கோடை காலங்களில் நம் உடலில் சளி இருமல் தொண்டை கட்டுதல் போன்ற பிரச்சனைகள் ஏற்படும் இதனை சரி செய்ய வெதுவெதுப்பான நீரில் சோம்பை சேர்த்து குடிப்பதன் மூலமாக பிரச்சனைகள் குணமடையும்.
ரத்த அழுத்தம் உள்ளவர்கள் தண்ணீரில் சோம்பு சேர்த்து அதனை பருவதன் மூலமாக ரத்த அளவையும் கட்டுப்படுத்துகிறது. இதயத்துடிப்பின் அளவையும் கட்டுப்படுத்த உதவுகிறது.
பெரும்பாலான பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் அதிகப்படியான ரத்தப்போக்கு, அதிகப்படியான வயிற்று வலி ஆகியவை ஏற்படும் வெதுவெதுப்பான நீரில் சோம்பு சேர்த்து பருவதன் மூலமாக மாதவிடாய் காலங்களில் அதிக ரத்தப்போக்கு மற்றும் அதிக வலிகள் ஏற்படுவது குறைக்க உதவுகிறது.