மின்சாரம் தாக்கி வாலிபர் பலி! தேனியில் பரபரப்பு!

Photo of author

By Rupa

மின்சாரம் தாக்கி வாலிபர் பலி! தேனியில் பரபரப்பு!

Rupa

மின்சாரம் தாக்கி வாலிபர் பலி! தேனியில் பரபரப்பு!
 தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தாலுகா கடமலை மயிலை ஒன்றியம் மயிலாடும்பாறை காவல்நிலையத்திற்கு உட்பட்ட குமணன்தொழு  கிராமம் அருகே மன்னூத்து செல்லும் சாலையில் உள்ள  கொடியரசன் என்பவருக்கு சொந்தமான தோட்டம் உள்ளது.குமணன் தொழுவை சேர்ந்த தம்பிதுரை மகன் சுதாகரன் என்பவர் ஆட்டுக்குட்டிக்கு இலை பறிக்க சென்றுள்ளார்.
அங்கிருந்த  இலவமரத்தில் ஏறி ஆட்டுக்குட்டிக்கு இலை ஒடித்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக அருகில் இருந்த உயர் அழுத்தமின்சார வயர்  மீது இலவம் மரகொம்பு பட்டு  சம்பவ இடத்திலே சுதாகரன் இறந்துவிட்டார்.  உயிர் இழப்பு சம்பந்தமாக மயிலாடும்பாறை காவல்துறையினர் உடலை கைப்பற்றி உடல்கூறு  ஆய்விற்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை செய்து வருகின்றனர்.