ஹோம் கேர் நிறுவனத்திலிருந்து வந்த வாலிபர் ஈடுபட்ட திருட்டு! போலீசார் விசாரணை!

0
145
A teenager from a home care company was involved in theft! Police investigation!
A teenager from a home care company was involved in theft! Police investigation!

ஹோம் கேர் நிறுவனத்திலிருந்து வந்த வாலிபர் ஈடுபட்ட திருட்டு! போலீசார் விசாரணை!

சேலம் மாவட்டம் சூரமங்கலம் நெடுஞ்சாலை நகர் பகுதியில் சேர்ந்தவர் ராமமூர்த்தி. இவர் திடீர் விபத்தில் காரணமாக இவருக்கு கால் முறிவு ஏற்பட்டது. மேலும் சேலம் மாவட்டம் ஐந்து ரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பி உள்ளார். மேலும் இவரை பராமரிப்பதற்காக சேலத்தில் உள்ள ஒரு தனியார் ஹோம்  கேர் நிறுவனத்தின் மூலம் கர்நாடக மாநில மாவட்டம் பாரதி நகர் பகுதியில் சேர்ந்த குணசேகரனின் மகன் கார்த்தி (28) என்பவரை உதவியாளராக பணியாற்றினார்கள்.

மேலும் இம்மாதம் கடந்த ஆறாம் தேதி கார்த்தி திடீரென மாயமானார்.இதனையடுத்து வீட்டில் பார்த்தபோது வீட்டில் இருந்து ஆறரை போல தங்க நகைகள் ,லேப்டாப் ஆகியவை திருடி சென்றுள்ளது தெரிய வந்தது. மேலும் அதிர்ச்சி அடைந்த வசந்தா இது குறித்து சூரமங்கலம் போலீசில் புகார் அளித்தார். மேலும் அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும் நகை திருடி  விட்டு கார்த்திக் கர்நாடகாவில் பதிவு இருப்பது தெரிய வந்தது. மேலும்   தங்க நகைகளை மற்றும் லேப்டாப் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Previous articleசாமி தரிசனத்திற்கு சென்ற குடும்பத்திற்கு நேர்ந்த கொடுமை! பள்ளத்தில் கவிழ்ந்த கார்!
Next articleயார் என்ன சொன்னால் என்னா?… அடுத்த படத்துக்கு தயாரான அண்ணாச்சி